பொது செய்தி

தமிழ்நாடு

'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திருப்பூர் முதலிடம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டத்தில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக வசிக்கும் மாநிலங்களிலும் ரேஷன் பொருட்கள் பெறும் வகையில், 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. தற்போது, 26 மாநிலங்களை சேர்ந்த, 58 ஆயிரத்து, 332 கார்டுதாரர்கள்

திருப்பூர்:'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டத்தில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக வசிக்கும் மாநிலங்களிலும் ரேஷன் பொருட்கள் பெறும் வகையில், 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. தற்போது, 26 மாநிலங்களை சேர்ந்த, 58 ஆயிரத்து, 332 கார்டுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.இந்த மாதத்தில் நேற்றைய நிலவரப்படி 1,015 டன் கோதுமை, 319 டன் அரிசி, ரேஷன் கடை வாயிலாக வினியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 518 வெளிமாநில தொழிலாளர் பயன் அடைந்துள்ளனர். அதில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 418 பேர் பயன்பெற்றுள்ளனர்.குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம், வெளிமாநில தொழிலாளர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநில அளவில், திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X