பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வுகள் முதல்வர் ஆலோசனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைசெயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர்

சென்னை:கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைசெயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுப்பையன்,சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பண்டிகை காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொற்று கட்டுப்பாட்டில் அலட்சியம் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

விஜயதசமியன்று கோவில்களை திறப்பதற்கு அரசு முடிவெடுக்க, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது பற்றி, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X