கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தடகள வீராங்கனை தற்கொலை கணவருக்கு 7 ஆண்டு சிறை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கடலுார்:வரதட்சணை கொடுமையால், தடகள வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரகுமார், 34; பொறியாளர். இவரும் பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை இந்துமதி, 26, என்பவரும் 2014ல் காதல் திருமணம் செய்தனர்.கடலுார், ஆல்பேட்டையில் வசித்து வந்தனர்.
 தடகள வீராங்கனை தற்கொலை  கணவருக்கு 7 ஆண்டு சிறை

கடலுார்:வரதட்சணை கொடுமையால், தடகள வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரகுமார், 34; பொறியாளர். இவரும் பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை இந்துமதி, 26, என்பவரும் 2014ல் காதல் திருமணம் செய்தனர்.கடலுார், ஆல்பேட்டையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகன், 4 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், 2018 ஜூலை 31ல், இந்துமதி துாக்கில் சடலமாக தொங்கினார்.இந்துமதியின் தாய் ஜெயபாரதி, மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். கடலுார் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். சொந்தமாக தொழில் செய்வதற்கு இந்துமதியிடம் 3 லட்சம் ரூபாய் கேட்டு, வீரகுமார் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், இந்துமதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

வரதட்சணை கொடுமை வழக்கில், வீரகுமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடலுார் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதி பாலகிருஷ்ணண் விசாரித்து, வீரகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை, 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X