கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.பி.,யிடம் ஒரு நாள் விசாரிக்க அனுமதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
கடலுார்:கொலை வழக்கில் சரணடைந்த கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு, கடலுார் நீதிமன்றம் அனுமதி அளித்தது.கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ், 55; செப்., 20ல் மர்மமான முறையில் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில், அவர் அடித்து கொல்லப்பட்டது
 தி.மு.க., - எம்.பி.,யிடம்  ஒரு நாள் விசாரிக்க அனுமதி

கடலுார்:கொலை வழக்கில் சரணடைந்த கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு, கடலுார் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ், 55; செப்., 20ல் மர்மமான முறையில் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில், அவர் அடித்து கொல்லப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக, கடலுார் தி.மு.க., - எம்.பி., ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி ஆலை மேலாளர் கந்தவேல் மற்றும் மூவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரமேஷ் தவிர, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.எம்.பி., ரமேஷ் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின், கடலுார் கிளை சிறையில்அடைக்கப்பட்டார். அவரை 13ம் தேதி கடலுார் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று காலை 11:00 மணியளவில் கடலுார் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ரமேஷை இரண்டு நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தீபா அனுமதி கேட்டார். ரமேஷ் ஆட்சேபனை தெரிவித்தார்.சி.பி.சி.ஐ.டி., போலீஸ் காவலில் விசாரிக்க ஒரு நாள் இன்று பகல் 1:15 வரை அனுமதி அளித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.அவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் அழைத்துச் சென்றனர்.


15 நாள் காவல்



இந்நிலையில், மூன்றரை மணி நேரத்தில் விசாரணையை முடித்து, மாலை 5:30 மணியளவில் நீதிமன்றத்தில் ரமேஷை ஆஜர்படுத்தினர். முன்னதாக அரசு மருத்துவமனையில், மருத்துவ சான்று பெற்று அழைத்து வந்தனர். அவரை 27ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து, கடலுார் கிளை சிறையில் ரமேஷ் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X