சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனை கொல்ல முயன்று அரசு அலுவலர் தற்கொலை

Added : அக் 13, 2021
Share
Advertisement
தர்மபுரி:குடும்ப தகராறில் மனமுடைந்த கணவர், குழந்தையை கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார்.தர்மபுரி, பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன், 45; தர்மபுரி சமூக நலத்துறை அலுவலகத்தில், திட்ட அலுவலர். இவரது மனைவி வளர்மதி, 36; தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர். 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.கடந்த இரு மாதங்களாக வளர்மதி நடத்தையில் சந்தேகமுள்ளதாக, தன் தாயிடம்

தர்மபுரி:குடும்ப தகராறில் மனமுடைந்த கணவர், குழந்தையை கொல்ல முயன்று தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி, பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன், 45; தர்மபுரி சமூக நலத்துறை அலுவலகத்தில், திட்ட அலுவலர். இவரது மனைவி வளர்மதி, 36; தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர். 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த இரு மாதங்களாக வளர்மதி நடத்தையில் சந்தேகமுள்ளதாக, தன் தாயிடம் சித்தார்த்தன் கூறி வந்துள்ளார். 12ம் தேதி தாயிடம் மொபைல் போனில் பேசிய சித்தார்த்தன், மனைவி வளர்மதி தகராறு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் குழந்தையின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். மயக்கமடைந்த குழந்தையை, இறந்து விட்டதாக நினைத்த அவர், வீட்டில் துாக்கில் தொங்கி உள்ளார்.

பணியில் இருந்து வீட்டிற்கு வந்த வளர்மதி, இருவரையும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு, சித்தார்த்தன் இறந்தார். குழந்தைக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். வளர்மதி மீது நடவடிக்கை எடுக்குமாறு, சித்தார்த்தனின் தாய் பவளக்கொடி புகாரின்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X