குளிர்பானத்தில் விஷம்? தாய், மகள் இறப்பு!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானத்தில் விஷம்? தாய், மகள் இறப்பு!

Added : அக் 13, 2021
Share
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன், 37; மனைவி கற்பகம், 34; மகன் சண்முகபாண்டி, 8; மகள் தர்ஷினி, 7. நேற்று முன்தினம் இரவில் தாயும், மகளும் ஓட்டலில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின், குளிர்பானம் அருந்தியுள்ளனர்.சற்று நேரத்தில் வாந்தி, மயக்கத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். உணவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன், 37; மனைவி கற்பகம், 34; மகன் சண்முகபாண்டி, 8; மகள் தர்ஷினி, 7. நேற்று முன்தினம் இரவில் தாயும், மகளும் ஓட்டலில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின், குளிர்பானம் அருந்தியுள்ளனர்.சற்று நேரத்தில் வாந்தி, மயக்கத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அவர்கள் உணவு வாங்கிய ஓட்டல், குளிர்பானம் வாங்கிய கடையில் ஆய்வு செய்தனர். அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X