பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபா என்ற சக்தி!

Added : அக் 13, 2021
Share
Advertisement
உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்கவும், கேள்விகள் கேட்கவும், நிராகரிக்கவும், சரிப்படுத்தவும், தேவையானதைக் கேட்டுப் பெறுவதற்குமான அதிகாரத்தைப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் பொதுமக்களுக்கு வழங்குகிறது.உள்ளாட்சியில் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் உள்ளன. மக்களுக்கு நெருக்கமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகளே.எல்லோருக்கும் பொறுப்புகள்

உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்கவும், கேள்விகள் கேட்கவும், நிராகரிக்கவும், சரிப்படுத்தவும், தேவையானதைக் கேட்டுப் பெறுவதற்குமான அதிகாரத்தைப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் பொதுமக்களுக்கு வழங்குகிறது.

உள்ளாட்சியில் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் உள்ளன. மக்களுக்கு நெருக்கமாக இருப்பது உள்ளாட்சி அமைப்புகளே.எல்லோருக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள்போலவே உள்ளாட்சி அமைப்புகளும் இடைவெளியின்றித் தொடர வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது.

இதை உறுதிசெய்ய வேண்டியது மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை.அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் அதிகாரங்களை விரிவுபடுத்தும் தளமாக உள்ளாட்சி அமைப்புகளைப் பார்க்கின்றன.கேள்வி கேட்கும் அதிகாரம்பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுக்கு ஒரு தனிச்சிறப்பான அதிகாரத்தை வழங்கியுள்ளது. அது கிராம சபை எனும் சக்தி. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில், அவைகளில், உறுப்பினர்கள் தான் விவாதிக்க முடியும். குடிமக்கள் கலந்துகொள்ள முடியாது.ஆனால், ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது

பஞ்சாயத்து ராஜ் சட்டம். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மட்டுமல்ல; செய்த வேலைகளை, செய்யவுள்ள வேலைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.ஒவ்வொருரூபாய் செலவும்...கிராமத்தில் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய் செலவும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். செய்யப்பட்ட, செய்யப்படும் ஒவ்வொரு வேலையும், திட்டமும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.தங்கள் ஊராட்சியில் என்னென்ன புதிய திட்டம் தேவை, என்னென்ன வேலைகள் வேண்டும் என்றெல்லாம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியும். அவற்றைச் செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்க முடியும்.ஏன் செய்து தரவில்லை என்று காரணமும் கேட்க முடியும்.

அவர்களும் விளக்கம் அளித்தாக வேண்டும். இத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்கும் கிராம சபை, அதைவிட உச்சமாக ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது. சமூக அக்கறை செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்களும்கூட கிராம சபையின் அதிகாரங்களைச் சரிவர புரிந்துகொள்ளவில்லை.

கிராம சபையின் அதிகாரங்களைக் கையாள்வதற்கு இவர்களைத் தயார்ப்படுத்தியிருந்தால், கிராம சபைக் கூட்டங்களில் இன்னும் பெரியளவில் மாற்றங்கள் நடந்திருக்கும்.புரிதலை உருவாக்கணும்பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பின் மூலம் கிராம மக்களே அதிகாரம் மிக்கவர்கள் என்ற புரிதலை, கிராம மக்களிடம் முதலில் உருவாக்க வேண்டும். இதன் மூலம், ஊழலுக்கு வாய்ப்பில்லாத, நீதிநெறி வழுவாத கிராம நிர்வாகத்தை மலர வைக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X