அரசியல் செய்தி

தமிழ்நாடு

22 வயது மாணவி, 90 வயது பாட்டி ஊராட்சி தலைவர்களாக தேர்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:எம்.இ., முதலாண்டு படிக்கும் 22 வயது மாணவி, 90 வயது மூதாட்டி ஆகியோர், ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.தென்காசி மாவட்டம், கடையம் அருகே வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு, பல ஆண்டுகளாக தலைவராக இருந்த கணேசன் காலமாகி விட்டதால், அவரது மனைவி ரேவதிமுத்துவடிவு போட்டியிட்டார்.ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்த
 22 வயது மாணவி, 90 வயது பாட்டி ஊராட்சி தலைவர்களாக தேர்வு

திருநெல்வேலி:எம்.இ., முதலாண்டு படிக்கும் 22 வயது மாணவி, 90 வயது மூதாட்டி ஆகியோர், ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு, பல ஆண்டுகளாக தலைவராக இருந்த கணேசன் காலமாகி விட்டதால், அவரது மனைவி ரேவதிமுத்துவடிவு போட்டியிட்டார்.

ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்த ரவிசுப்பிரமணியன், தன் மகள் சாருகலா, 22 என்பவரை நிறுத்தினார். இவர் கோவையில் ஒரு கல்லுாரியில் எம்.இ., முதலாண்டு படித்து வருகிறார்.சாருகலா கூறுகையில், ''796 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, சொந்த ஊரில் இருந்து பணியாற்றுவேன்,'' என்றார். இவரது தந்தை ரவிசுப்பிரமணியன், தி.மு.க., பிரமுகர். செங்கல் சூளை, விவசாயம் மேற்கொள்கிறார்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் பெருமாத்தாள், 90, என்ற மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார்.இவரது மகன் தங்கபாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலர். ஏற்கனவே சிவந்திபட்டி ஊராட்சி தலைவராக, மூன்று முறை வெற்றி பெற்றவர்.இந்த முறை, தங்கபாண்டியன், கீழநத்தம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனால், தன் தாயார் பெருமாத்தாளை சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார்.'உள்ளாட்சி பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்றாலும், பின்னணியில் இருக்கும் அவர்களது குடும்பத்து ஆண்களே ஆதிக்கம் செலுத்துவது வரலாறு. இவர்களாவது தனித்துவமாக செயல்பட வேண்டும்' என அவர்களுக்கு ஓட்டளித்த மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X