கார் 'பார்க்கிங்' பகுதியான பஸ் ஸ்டாண்ட் வசதிகள் ஏற்படுத்தாததால் அதிருப்தி

Added : அக் 13, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் கார் பார்க்கிங் இடமாக மாறி வருவதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகரில், நல்லகாத்து பாலம் அருகில், கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனையடுத்து, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.பஸ் ஸ்டாண்ட்
 கார் 'பார்க்கிங்' பகுதியான பஸ் ஸ்டாண்ட்   வசதிகள் ஏற்படுத்தாததால் அதிருப்தி


வால்பாறை : வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் கார் பார்க்கிங் இடமாக மாறி வருவதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வால்பாறை நகரில், நல்லகாத்து பாலம் அருகில், கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பணிமனையுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இதனையடுத்து, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே, பஸ் ஸ்டாண்ட் நகர் பகுதியை விட்டு தொலைவில் இருப்பதாக கூறி, காந்திசிலை வளாகத்தை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றினர்.

இதனையடுத்து, வெளியூர் செல்லும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், எஸ்டேட் பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன.இதனிடையே, புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர இருக்கை, கழிப்பிடம் உள்ளிட்ட எவ்வித வசதியும் இல்லாததால், பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதை தவிர்த்தனர். இதனால், வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்து, பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்காததால், அப்பகுதி கார் பார்க்கிங்காக மாறி வருகிறது. இதனால், கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இது குறித்து, பயணிகள் கூறுகையில், 'வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில், பயணிகளுக்கு தேவையான இருக்கை, குடிநீர், கழிப்பிட வசதி செய்து, பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்க வேண்டும். அனைத்து அரசு பஸ்களையும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, ரோட்டை சீரமைத்து, முக்கிய சந்திப்பு பகுதியாக மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X