பொது செய்தி

தமிழ்நாடு

5 கோடி வீடுகளுக்கு ஜல் ஜீவன்' இயக்கம் குடிநீர்

Added : அக் 13, 2021
Share
Advertisement
நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கம் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது,நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தியதற்காக தமிழகம், மணிப்பூர், குஜராத், உத்தரகண்ட்,

நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கம் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது,

நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தியதற்காக தமிழகம், மணிப்பூர், குஜராத், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டது.தற்போது ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது

''ஜல் ஜீவன் இயக்கத்தின் வாயிலாக மக்களுக்கு குடிநீர் மட்டுமல்லாமல், அதிகாரமும் பரவலாக்கப்பட்டுள்ளது. 2019ல் ஜல் ஜீவன் இயக்கம் துவக்கப்பட்ட பின், 1.25 லட்சம் கிராமங்களில் ஐந்து கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.ரயில் மற்றும் டேங்கர் வாயிலாக நாட்டின் ஒரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் நிலை ஏற்படக்கூடாது; இதை நாம் உறுதி செய்ய வேண்டும்கழிவு மேலாண்மை அமைப்பை இரண்டு லட்சம் கிராமங்கள் துவங்கியுள்ளன.

40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளன.காதி மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது. தன்னிறைவு இயக்கத்தை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிக உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளது'' என்று சொல்கிறார் பிரதமர் மோடி.தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 கோடி கிராமப்புற வீடுகளில் 21.65 லட்சம் வீடுகளில் மட்டுமே திட்டம் தொடங்கியபோது குழாய்நீர் இணைப்பு இருந்தது.

தற்போது இந்த 2 ஆண்டுகளில், குடிநர் இணைப்புகளன் மொத்த எண்ணிக்கை 41 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.இந்த திட்டத்தின் தமிழகத்துக்கான மானியம் கடந்த நிதி ஆண்டைவிட இந்த நிதியாண்டுக்கு கிட்டத்தட்ட 4 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2020--2021-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.921.99 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 2021--2022-ம் நிதியாண்டுக்கு ரூ.3,691.21 கோடியாக மானியம் உயர்த்தப்பட்டு உள்ளது.

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் வழங்க வேண்டுமென்றால் பணிகளின் வேகத்தை 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய ஜல்சக்தி துறை கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டப்பணிகள் வேகம் எடுத்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X