தமிழ்நாடு

ஊர்களில் தங்காத வி.ஏ.ஓ.,க்களால் மக்கள் அவதி

Added : அக் 14, 2021
Share
Advertisement
இளையான்குடி : இளையான்குடி,மானாமதுரை தாலுகாக்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்கள் பெரும்பாலானோர் அந்தந்த குரூப்பிற்குட்பட்ட கிராமங்களில் தங்காமல், நகர் பகுதியில் இருப்பதால் கிராம மக்கள் வி.ஏ.ஓ.,க்களை தேடி அலைந்து வருகின்றனர்.மானாமதுரை தாலுகாவில் 35 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்களும்,இளையான்குடி தாலுகாவில் 45 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்காக

இளையான்குடி : இளையான்குடி,மானாமதுரை தாலுகாக்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்கள் பெரும்பாலானோர் அந்தந்த குரூப்பிற்குட்பட்ட கிராமங்களில் தங்காமல், நகர் பகுதியில் இருப்பதால் கிராம மக்கள் வி.ஏ.ஓ.,க்களை தேடி அலைந்து வருகின்றனர்.

மானாமதுரை தாலுகாவில் 35 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்களும்,இளையான்குடி தாலுகாவில் 45 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்காக அவர்களது குரூப்பிற்குட்பட் ட ஒரு கிராமத்தில் அலுவலக கட்டடம் உள்ளது.ஆனால் பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் இல்லாமல் அருகில் உள்ள நகர் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளதால் அவர்களை தேடி கிராம மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வி.ஏ.ஓ.,க்கள் சிலரிடம் கேட்ட போது,கிராமத்தில் உள்ள அலுவலக கட்டடங்கள் பெரும்பாலும் சேதமடைந்து அங்கு தங்க முடியாத நிலையில் உள்ளதாகவும்,மின்வசதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாததால் நகர் பகுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளோம்.அலுவலகத்தில் எங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்களை எழுதி வைத்துள்ளோம்,

அலைபேசிகளில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வருகிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X