பொது செய்தி

தமிழ்நாடு

பிஎச்.டி.,  அவகாசம் நீட்டிப்பு  சுயநிதி கல்லுாரி வரவேற்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
கோவை:உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., கல்வித் தகுதிக்கான அவகாசம், 2023 ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல், மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி., கட்டாயம் என்ற அறிவிப்பு, 2018ல் அறிவிக்கப்பட்டு, பணியில் இருந்தவர்களுக்கு கல்வித் தகுதியை

கோவை:உதவி பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., கல்வித் தகுதிக்கான அவகாசம், 2023 ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல், மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி., கட்டாயம் என்ற அறிவிப்பு, 2018ல் அறிவிக்கப்பட்டு, பணியில் இருந்தவர்களுக்கு கல்வித் தகுதியை மேம்படுத்த, 2021 ஜூலை வரை யு.ஜி.சி., அவகாசம் வழங்கியது. ஆனால், கொரோனா காரணமாக உயர்கல்வி நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாததால், பலர் பிஎச்.டி., முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கல்வித் தகுதியை மேம்படுத்த 2023 ஜூலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை, தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல், மேலாண்மையியல் கல்லுாரிகள் சங்கத்தினர் வரவேற்று உள்ளனர்.

மேலும், 'இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களை கையாளும் உதவி பேராசிரியர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு தேர்ச்சியும், முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை கையாளும் உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி., முடித்து இருப்பதையும் குறைந்தபட்ச தகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும்' எனவும், இந்த சங்கம் தரப்பில் யு.ஜி.சி.,க்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X