நோய்பரப்பும் கேந்திரமாகும் செங்குளம் கண்மாய்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சிவகாசி : எந்த ஒரு நகர், கிராமமாக இருந்தாலும் அங்குள்ள கண்மாயில் மழை பெய்து தண்ணீர் தேங்கினால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் திருத்தங்கல் செங்குளம் கண்மாயிலோ தண்ணீர் வரத்துக்கு பதில் நகரின் ஓட்டு கழிவுகளும் சங்கமிக்க நோய் பரப்பும் கேரந்திரமாக உருமாறி உள்ளது.திருத்தங்கலில் இருந்து செங்கமலநாச்சியார்புரம் செல்லும் ரோட்டில் நகரின் மையப் பகுதியில்

சிவகாசி : எந்த ஒரு நகர், கிராமமாக இருந்தாலும் அங்குள்ள கண்மாயில் மழை பெய்து தண்ணீர் தேங்கினால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் திருத்தங்கல் செங்குளம் கண்மாயிலோ தண்ணீர் வரத்துக்கு பதில் நகரின் ஓட்டு கழிவுகளும் சங்கமிக்க நோய் பரப்பும் கேரந்திரமாக உருமாறி உள்ளது.

திருத்தங்கலில் இருந்து செங்கமலநாச்சியார்புரம் செல்லும் ரோட்டில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது செங்குளம் கண்மாய். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்வேறு தேவைகளுக்கும் பயன்பட்டு வந்த கண்மாயில், குளிக்க, துணி துவைக்க என பொதுமக்கள் பல்வேறு புழக்கங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் கண்மாய் கழிவுநீர் தேக்கமாக மாறியது. இதனால் நகர் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

கண்மாய் அருகில் உள்ள இந்திரா நகர், பாண்டியன் நகர் குடியிருப்புகளின் சாக்கடை கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள் அனைத்தும் செங்குளம் கண்மாயிலேயே கலக்கிறது. நகரின் ஒட்டுமொத்த குப்பையும் இங்குதான் கொட்டப்படுகிறது. இதனால் கண்மாயிலுள்ள தண்ணீரின் நிறமே மாறி கலங்கலாக உள்ளது. இதை கடந்து சென்றாலே மூக்கை பொத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். அந்த அளவிற்கு சுகாதாரக்கேடாக உள்ளது.

கண்மாய் எதிரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை பூட்டிக்கொண்டு பணி செய்த காலமும் உண்டு. கண்மாய் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் போர்வெல் அமைத்து இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் ஓரளவிற்கு உப்பாக இருந்தாலும் பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது போர் வெல் தண்ணீர் கலங்கலாக உள்ளது. கண்மாய் முழுவதுமே பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் கண்மாய் கரை ஓரத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று பகுதிகளிலும் தடுப்புச்சுவர் இல்லை. இருக்கிற தடுப்புச் சுவரும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. கண்மாயினை துார்வாரி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். எந்த தேர்தல் வந்தாலும் கண்மாய் துார்வாரப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெறுபவர்கள் அதன் பின்னர் கண்டு கொள்வதே இல்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

குருசாமி முன்னாள் கவுன்சிலர்: 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்த செங்குளம் கண்மாய் தற்போது நோய் பரப்பும் கேந்திரமாக மாறிவிட்டது. கண்மாயினை துார்வாரி சுற்றிலும் நடைபாதை அமைத்து பாதுகாக்கவேண்டும் . குடியிருப்புகளின் கழிவுகள் கண்மாயில் கலக்க விடாமல் ஊருக்கு வெளியே கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலையரசன், பா.ஜ., நகர தலைவர்: திருத்தங்கல் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பிறகு மிகவும் பிரபலமாக உள்ளது செங்குளம் கண்மாய். கண்மாயினை கடந்து சென்றாலே நோய் வந்துவிடும் என்ற அளவிற்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இக்கண்மாயிலுள்ள கழிவு நீர் அனைத்தும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அருகிலுள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிட வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.சுதாகர், சமூக ஆர்வலர்: ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி செல்லும். ஆனால் இந்த செங்குளம் கண்மாய்க்கு ஆண்டு முழுவதுமே செங்கால் நாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் பலவும் இங்கு வசிக்கின்றன. கண்மாயின் கழிவினால் வெளிநாட்டு பறவைகள் பாதிக்கப்படுகின்றன. கண்மாயை துார்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், டிரைவர்: மழை பெய்தால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணத்தில் இப்பகுதியினர் மட்டும் மழை பெய்ய வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு கண்மாய் உள்ளது. கண்மாயின் மொத்த கழிவுகளுடன் மழை நீர் சேர நகர் முழுவதும் பாதிப்பை தருகிறது. இதனால் இப்பகுதியினர் அடிக்கடி மருத்துவமனைக்கு அலைகின்றனர்.சீனிவாசன் பி.டி.ஓ.,: செங்குளம் கண்மாய் துார்வாரப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் கண்மாய் துார்வாரப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X