மானாமதுரை - பரமக்குடி பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்| Dinamalar

மானாமதுரை - பரமக்குடி பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

Added : அக் 14, 2021
Share
மானாமதுரை : மானாமதுரை-பரமக்குடிக்கு பள்ளி நேரங்களில் போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் கூரை பயணம் மேற்கொண்டு வருவதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.மானாமதுரையிலிருந்து சந்தனுார் சாலை வழியாக இளையான்குடி, பரமக்குடி செல்லும் வழியில் மூங்கில்ஊரணி, கோட்டைமேடு, சந்தனுார் சாலை, எஸ்.காரைக்குடி, நல்லாண்டிபுரம், ஆலம்பச்சேரி,

மானாமதுரை : மானாமதுரை-பரமக்குடிக்கு பள்ளி நேரங்களில் போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் கூரை பயணம் மேற்கொண்டு வருவதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

மானாமதுரையிலிருந்து சந்தனுார் சாலை வழியாக இளையான்குடி, பரமக்குடி செல்லும் வழியில் மூங்கில்ஊரணி, கோட்டைமேடு, சந்தனுார் சாலை, எஸ்.காரைக்குடி, நல்லாண்டிபுரம், ஆலம்பச்சேரி, மேலநெட்டூர், கீழநெட்டூர். கோச்சடை தெ.புதுக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மானாமதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

மாலை நேரங்களில் இந்த வழியாக போதுமான பஸ் வசதி இல்லாததால் தனியார் பஸ்களில் படிக்கட்டுகளிலும்,மேற் பகுதியிலும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருவதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி விடும் நேரத்திற்கு கூடுதலான பஸ்களை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X