பொது செய்தி

தமிழ்நாடு

முளைப்பாரி கரைக்கும் ஊரணி; ஆக்கிரமிப்பால் பக்தர்கள் தவிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
காரியாபட்டி : கோயில் விழாவின் போது முளைப்பாரி கரைக்கும் தாமரைக் குளம் ஊரணி ஆக்கிரமிப்பால் அடையாளத்தை இழந்து வருவதையடுத்து ,இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .காரியாபட்டியில் ஐயப்பன் கோயில் அருகே ஒரு ஏக்கரில் தாமரைக்குளம் ஊரணி உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு கோயில் விழாக்களின்போது முளைப்பாரி கரைக்கவும் பயன்படுத்தப்பட்டது. லேசான மழைக்கு கூட

காரியாபட்டி : கோயில் விழாவின் போது முளைப்பாரி கரைக்கும் தாமரைக் குளம் ஊரணி ஆக்கிரமிப்பால் அடையாளத்தை இழந்து வருவதையடுத்து ,இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

காரியாபட்டியில் ஐயப்பன் கோயில் அருகே ஒரு ஏக்கரில் தாமரைக்குளம் ஊரணி உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு கோயில் விழாக்களின்போது முளைப்பாரி கரைக்கவும் பயன்படுத்தப்பட்டது. லேசான மழைக்கு கூட ஊரணி நிறைந்துவிடும். காலப்போக்கில் மழை அளவு குறைந்து ஊரணி வரண்டு சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தையடுத்து, மழைநீர் நிரம்பாததால் முளைப்பாரி கரைக்க முடியாமல் போனது.

ஆக்கிரமிப்பால் வரத்து ஓடை அடைபட்டு மெல்ல மெல்ல ஊரணியை ஆக்கிரமித்து வருகின்றனர். ஊரணி அளவு சுருங்கி தன் அடையாளத்தை இழந்து வருகிறது. இந்நிலையில் அங்கு ஒரு குளியல் தொட்டி கட்டப்பட்டது. இங்கு குளிக்க வருவோர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தனிநபர்கள் ஆக்கிரமித்து மாடுகளை கட்டி வருவதால் சகதியாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. போட்டி போட்டு ஆக்கிரமித்து வருவதால் ஊரணி மாயமாகும் நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக பயன்பட்டு வருகிறது. இதை தடுக்க ஊரணியை மீட்டு சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X