வடிகால் வசதி இல்லீங்கோ! ஒரு போன் போதுமே!

Added : அக் 14, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு தாலுகா, கோவிந்தாபுரம் புதுக்காலனி சாக்கடை கட்டப்பட்டுள்ளது. ஆனால், கழிவுநீர் வெளியேறி செல்ல இடவசதி இல்லை. இதனால், சூலக்கல் ரோட்டில் கழிவுநீர் தேங்கி சுகாாதாரம் பாதிக்கிறது.கே.சண்முகசுந்தரம், கோவிந்தாபுரம்.நிழற்கூரை வசதி இல்லைஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி பஸ் ஸ்டாப்பில், பல ஆண்டுகளாக நிழற்கூரை அமைக்காமல் இருப்பதால், மழைக்காலத்தில் பஸ் வருகைக்காக

கிணத்துக்கடவு தாலுகா, கோவிந்தாபுரம் புதுக்காலனி சாக்கடை கட்டப்பட்டுள்ளது. ஆனால், கழிவுநீர் வெளியேறி செல்ல இடவசதி இல்லை.

இதனால், சூலக்கல் ரோட்டில் கழிவுநீர் தேங்கி சுகாாதாரம் பாதிக்கிறது.கே.சண்முகசுந்தரம், கோவிந்தாபுரம்.நிழற்கூரை வசதி இல்லைஜமீன்ஊத்துக்குளி கைகாட்டி பஸ் ஸ்டாப்பில், பல ஆண்டுகளாக நிழற்கூரை அமைக்காமல் இருப்பதால், மழைக்காலத்தில் பஸ் வருகைக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

எஸ்.ஆனந்தி, ஜமீன்ஊத்துக்குளி.அதிகாரிகள் மனசு வைக்கணும்கோட்டூர் மலையாண்டிபட்டணம், மண்ணுடையார் தெருவில், சாக்கடை துார்வாரி ரோட்டில் கழிவு குவிப்பதால், துர்நாற்றமும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. பேரூராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.டி.ஆறுச்சாமி, மலையாண்டிபட்டணம்.ரோடு முழுக்க பள்ளம்பொள்ளாச்சி அடுத்த, வஞ்சியாபுரம் பிரிவு பகுதியில், பல இடங்களில் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

அதில், மழைநீர் தேங்கி நிற்பதால் வானக ஓட்டுனர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்; ரோடும் உருக்குலைகிறது.-கே. மாரிமுத்து, வஞ்சியாபுரம்.மழைநீர் கால்வாயை காணோம்!நெகமம் வாரச்சந்தை, துணை வேளாண் அலுவலகத்தை ஒட்டி உள்ள மழைநீர் கால்வாயில், வளர்ந்துள்ள புதரை அகற்றி, மழை நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். புதரால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தையும் போக்க வேண்டும்.பி.சரவணன், நெகமம்.சாக்கடை கட்டமைப்பு இல்லைமடத்துக்குளம் தாலுகா, கழுகரை ஆதிதிராவிடர் காலனியில், சாக்கடை கட்டமைப்பு இல்லாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மேலும் நோய் பரவவும் வாய்ப்புள்ளது.-அ. கருப்புசாமி, கழுகரை, மடத்துக்குளம்.இறைச்சிக்கழிவுகள் வீச்சுஅமராவதி ஆற்றுப் பாலம் அருகே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட முடிவதில்லை. சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மு.சுந்தரம், மடத்துக்குளம்.ஒளிராத கோபுரவிளக்குஉடுமலை பெரியகோட்டை முத்துநகர் நான்கு ரோடு சந்திப்பிலுள்ள உயர்மின் கோபுர விளக்கு எரிவதில்லை.

இதனால், அப்பகுதியே இருளில் மூழ்கி விடுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.பாலசுப்பிரமணியன், உடுமலை.தெருவிளக்குகள் எரிவதில்லைஉடுமலை அய்யலுமீனாட்சி நகர், நெப்போலியன் நகரில் தெருவிளக்குகள் எரிவதில்லை. அப்பகுதியில், இருள் சூழ்வதோடு, திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ. கனகராஜ், உடுமலை.திறந்தவெளி கழிப்பிடம்உடுமலை மாவட்ட கல்வி அலுவலகம் முன், கழிவுநீர் வாகனம் நிறுத்தப்படுவதால், திறந்தவெளி கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. என். குப்புசாமி, உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X