பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வேன்களில் 'காஸ்கிட்' எச்சரிக்கும் அதிகாரிகள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் ஆம்னி வேன்களில், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் 'காஸ்கிட்' பொருத்தக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், பள்ளி செல்லும் பெரும்பாலான மாணவ, மாணவியர் அரசு வாயிலாக, வழங்கப்பட்ட அரசு பஸ் பாஸ், இலவச சைக்கிளில் சென்று திரும்புகின்றனர்.இது தவிர, தனியார் பள்ளிகளில் பஸ், வேன்களில் பலர்

உடுமலை : குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் ஆம்னி வேன்களில், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் 'காஸ்கிட்' பொருத்தக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், பள்ளி செல்லும் பெரும்பாலான மாணவ, மாணவியர் அரசு வாயிலாக, வழங்கப்பட்ட அரசு பஸ் பாஸ், இலவச சைக்கிளில் சென்று திரும்புகின்றனர்.இது தவிர, தனியார் பள்ளிகளில் பஸ், வேன்களில் பலர் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்நிலையில், நவ., மாதம், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் துவக்கப்படுகிறது. இதனால், பஸ் வசதி இல்லாத பகுதிகளில் இருந்து, ஆட்டோ, ஆம்னி வேன், 'டாடா ஏஸ்' போன்ற வாகனங்களில் குழந்தைகள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வகை வாகனங்களுக்கு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை எரிபொருள் என்றாலும், பெரும்பாலான வாகனங்கள், 'எல்.பி.ஜி., காஸ்கிட்' பொருத்தி, இயக்கப்படுகிறது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் 'காஸ்கிட்டை' பொருத்த, கூடுதல் செலவாகும் என்பதால், உள்ளூர் தயாரிப்பிலான காஸ்கிட்டை பொருத்தியே வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் எழுகிறது.

இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் 'காஸ்கிட்' பொருத்தக் கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளுடன் இயக்கப்பட வேண்டும். தரமான கம்பெனியின் 'காஸ்கிட்' பொருத்துவது அவசியம். விதிமுறைகளை மீறி, தரமற்ற காஸ்கிட் பொருத்தியிருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.குழந்தைகளை ஏற்றிச்செல்லும் தனியார் வாகனங்கள், விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என, பெற்றோர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X