பொது செய்தி

தமிழ்நாடு

'கவுரவ' பிரச்னையில் கரை சேர்ந்த தி.மு.க., கருவலூர் களத்தில் வெற்றியை தக்க வைத்தது

Added : அக் 14, 2021
Share
Advertisement
அவிநாசி : கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., தனது செல்வாக்கை நிலை நிறுத்தி கொண்டது.அவிநாசி ஊராட்சி ஒன்றிய அளவில், அரசியல் பரபரப்பு அதிகமுள்ள பகுதியாகவும், அதன் விளைவாக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடி உள்ள இடமாகவும் அடையாளம் காணப்படுவது, கருவலுார் ஊராட்சி.சமீபத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. ஆளுங்கட்சியாக


அவிநாசி : கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., தனது செல்வாக்கை நிலை நிறுத்தி கொண்டது.

அவிநாசி ஊராட்சி ஒன்றிய அளவில், அரசியல் பரபரப்பு அதிகமுள்ள பகுதியாகவும், அதன் விளைவாக பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடி உள்ள இடமாகவும் அடையாளம் காணப்படுவது, கருவலுார் ஊராட்சி.சமீபத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. ஆளுங்கட்சியாக இருப்பதாலும், கருவலுாரை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, தி.மு.க., வசமுள்ள நிலையிலும், ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியாக வேண்டிய நெருக்கடி, தி.மு.க.வுக்கு ஏற்பட்டது.

அதே நேரம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி, அ.தி.மு.க., வசமுள்ள நிலையில், கடந்த முறை வெற்றி பெற்ற தலைவர் மாரிமுத்து, அ.தி.மு.க.,வைச் சார்ந்தவர் என்பதாலும், தலைவர் பதவியை தக்க வைக்க வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது.சுயேட்சையால் சிக்கல்இவ்வாறான அரசியல் 'சதுரங்கத்தில்', ஊராட்சியில் பணியாற்றிய பம்ப் ஆபரேட்டர் முருகன், தனது வேலையை ராஜினாமா செய்து, தலைவர் பதவிக்கு களம் காண, அவரை, தங்கள் கட்சியின் வேட்பாளராக, தி.மு.க., வினர் அடையாளப்படுத்தினர்.

தேர்தல் களத்தில், தி.மு.க. மட்டுமின்றி, காங்., கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், அவருக்கு ஆதரவாக பணியாற்றினர். கடந்த முறை தேர்தலில், இரண்டாமிடம் பிடித்த முருகேசன், அ.தி.மு.க.வினரின் ஆதரவில் களம் கண்டார்.மொத்தம் 3,422 ஓட்டுகள் பதிவாகின. முருகன், 1,571 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்; முருகேசன், 1,337 ஓட்டு, சுயேட்சையாக போட்டியிட்ட அரவிந்தசாமி, 327 ஓட்டுபெற்றனர். அரவிந்தசாமி பிரித்தது, தி.மு.க., ஆதரவு வேட்பாளருக்கான ஓட்டு என, கூறப்படுகிறது.பிரச்னைகள் ஏராளம்இந்த தேர்தலில், தி.மு.க. ஆதரவு வேட்பாளர் மிக எளிதாக, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு சுற்றிலும், அ.தி.மு.க.,ஆதரவு வேட்பாளரும் கணிசமான ஓட்டுகளை பெற்றார்.

இதனால், கடைசி வரை வெற்றி தோல்வியை உறுதிப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது. இருவருக்குமான ஓட்டு வித்தியாசம், வெறும், 254 மட்டுமே. எது எப்படியோ, கவுரவ பிரச்னையில் தட்டுத்தடுமாறி கரை சேர்ந்தார் தி.மு.க., ஆதரவை பெற்ற முருகன்.கருவலுாரில் தேங்கி கிடக்கும் ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X