சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடித்து விரட்டிய பெண்கள் சாராய வியாபாரிகள் ஓட்டம்

Added : அக் 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாகப்பட்டினம்:நாகை அருகே, கள்ளச்சாராய வியாபாரிகள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆவேசமடைந்த பெண்கள், சாராய வியாபாரிகளை அடித்து விரட்டினர்.நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி அடுத்த மூங்கில்குடி கிராமத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு, கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடந்து வருகிறது.நடவடிக்கை
 அடித்து விரட்டிய பெண்கள் சாராய வியாபாரிகள் ஓட்டம்

நாகப்பட்டினம்:நாகை அருகே, கள்ளச்சாராய வியாபாரிகள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆவேசமடைந்த பெண்கள், சாராய வியாபாரிகளை அடித்து விரட்டினர்.

நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி அடுத்த மூங்கில்குடி கிராமத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு, கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடந்து வருகிறது.நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள், வேளாங்கண்ணி போலீசாரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இரு தினங்களுக்கு முன், கலெக்டர் அருண்தம்புராஜிடம் புகார் அளித்தனர். கலெக்டரும், சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்.

போலீசார் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால், ஆவேசமடைந்த மூங்கில்குடி கிராம பெண்கள், அப்பகுதி மயானம் அருகே சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்த கும்பலை அடித்து விரட்டினர்.பெண்களின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வியாபாரிகள், சாராய பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு தப்பியோடினர். தொடர்ந்து, கிராம பெண்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்து அழித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
14-அக்-202111:52:36 IST Report Abuse
raja இதுபோல் மற்ற இடங்களிலும் நடக்க வாழ்த்துக்கள்... இவனுவோ விடியல் கட்சியை சேர்ந்த மர்மநபர்கள் தான்..... பெண்களே ஜாக்கிரத்தையா இருங்க....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
14-அக்-202110:47:31 IST Report Abuse
sankar இது எல்லா இடத்துலயும் நடக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X