சினிமா ஆசை காட்டி மோசடி டுபாக்கூர் இயக்குனர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினிமா ஆசை காட்டி மோசடி 'டுபாக்கூர்' இயக்குனர் கைது

Added : அக் 14, 2021
Share
ராமேஸ்வரம்:சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, ராமேஸ்வரத்தில் பெண்களிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் இமானுவேல்ராஜா, 43. முகநுாலில் தன் பெயர் சிவசக்தி, சினிமா இயக்குனர் என போலியாக பதிவேற்றம் செய்து, பல பெண்களிடம் நடிக்க வைப்பதாகக் கூறி, 'தொடர்பு' வைத்துக் கொண்டார். அதை 'வீடியோ' எடுத்து மிரட்டி,

ராமேஸ்வரம்:சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி, ராமேஸ்வரத்தில் பெண்களிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் இமானுவேல்ராஜா, 43. முகநுாலில் தன் பெயர் சிவசக்தி, சினிமா இயக்குனர் என போலியாக பதிவேற்றம் செய்து, பல பெண்களிடம் நடிக்க வைப்பதாகக் கூறி, 'தொடர்பு' வைத்துக் கொண்டார். அதை 'வீடியோ' எடுத்து மிரட்டி, அப்பெண்களிடம் பணம் பறித்து சொகுசாக வாழ்ந்தார்.

இவர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சில பெண்களிடம் இதுபோல மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இதன்படி, அவரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி, சென்னையில் பல திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இமானுவேல் ராஜாவை துாத்துக்குடி போலீசார் குண்டாசில் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்தவர், பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து மன்மதனாக வாழ்ந்துள்ளார்.அவரது அலைபேசியை போலீசார் ஆய்வு செய்ததில், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனிமையில் இருந்த வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X