பொது செய்தி

தமிழ்நாடு

பண்டிகை முன்பணம்; சிறப்பாசிரியர் வலியுறுத்தல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'சக ஆசிரியர்களை போன்று பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்கவேண்டும்' என, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், பண்டிகை கால முன்பணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகையொட்டி பெறலாம்.இதில், 80 சதவீதத்தினர், தீபாவளி
 பண்டிகை முன்பணம்; சிறப்பாசிரியர் வலியுறுத்தல்

திருப்பூர் : 'சக ஆசிரியர்களை போன்று பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்கவேண்டும்' என, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், பண்டிகை கால முன்பணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகையொட்டி பெறலாம்.இதில், 80 சதவீதத்தினர், தீபாவளி கொண்டாட்டத்துக்கே முன்பணம் வேண்டி விண்ணப்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், 16 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுவதில்லை.தாங்கள் பெறும், 10 ஆயிரம் ரூபாய் ஊதியம், அன்றாட செலவுகளுக்கே போதாத நிலையில், பண்டிகை நேரங்களில் அல்லல்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட் டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களே முழு நேரம் பாடம் நடத்தினர்.ஊரடங்கிலும் எமிஸ், டைப்பிங் வேலை, கணினி சம்பந்தப்பட்ட வேலை மற்றும் பள்ளி நேரங்களில் தரப்படும் அனைத்து பணிகளையும் தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.அரசுக்கு சிக்கல் ஏற்படும்போது மட்டும் பயன்படுத்தி, பின் ஒதுக்குவது அறமற்றது. பண்டிகை கால முன்பணம் என்பது, ஊதியத்தில் முறையாக பிடித்தம் செய்யப்படுகிறது எனும் சூழலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு முன்வரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X