கோவில்: தீர்வு காணாத தொல்லியல் துறை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்: தீர்வு காணாத தொல்லியல் துறை

Added : அக் 14, 2021
Share
தஞ்சாவூர்:தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மழை காலங்களில், மழை நீர் தேங்குவதால், தொல்லியல்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற இக்கோவிலில், திருக்கயிலாய காட்சி, சிவபெருமான் திருமண காட்சி, தேவாரத்தை பாடிய 108
கோவில்: தீர்வு காணாத தொல்லியல் துறை

தஞ்சாவூர்:தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மழை காலங்களில், மழை நீர் தேங்குவதால், தொல்லியல்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற இக்கோவிலில், திருக்கயிலாய காட்சி, சிவபெருமான் திருமண காட்சி, தேவாரத்தை பாடிய 108 சிவதீட்சை பெற்றவர்களின் உருவங்கள் என நுண்ணிய அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய, 40 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

சிறப்புமிக்க கோவிலை இந்திய தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்குள்ள சிற்பங்களையும், கோவிலின் அழகையும் காண வருகின்றனர். லேசான மழை பெய்ததாலும், கோவிலின் நந்தி மண்டபம், வெளிப்பிரகாரம், பெரியநாயகி அம்பாள் சன்னதி போன்ற பகுதிகளில், மழைநீர் தேங்கி விடுகிறது.

இதனால், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவில் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தொல்லியல் துறையினர், மழைநீர் உடனடியாக வடிந்து செல்லும் வகையில், நிரந்தரமான கட்டமைப்பு உருவாக்காமல், அவ்வப்போது மோட்டர் வைத்து உறிஞ்சி, மழைநீரை வெளியேற்றுகின்றனர். அடிக்கடி மழை நீர் தேங்குவதால், கோவிலில் உள்ள பல சிற்பங்கள் வீணாகி வருகிறது.

எனவே, மழை நீர் தேங்குவதை தடுக்க, தொல்லியல்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும், என்று சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X