பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புவனம் வட்டாரத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த ஒரு வருடத்தில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதால் கல்வி துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும். என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலைப்பள்ளிகளும் மற்ற இடங்களில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகள்

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த ஒரு வருடத்தில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதால் கல்வி துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும். என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலைப்பள்ளிகளும் மற்ற இடங்களில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகள் செயல்படுகின்றன. திருப்புவனத்தில் பெண்களுக்கு என தனியாக அரசு பள்ளி இருப்பதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயில்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் நீண்ட நாட்கள் கழித்து 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 10 மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவிகள் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு திருமணமாகியுள்ளது.

பள்ளிக்கு வரும் போது மெட்டி உள்ளிட்டவற்றை கழட்டி வைத்து விட்டு திருமாங்கல்யத்தை மட்டும் மறைத்தவாறு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதில் ஒருசில மாணவிகள் படிப்பையும் நிறுத்தியுள்ளனர்.கல்விதுறை அதிகாரிகள் இதுவரை பள்ளிக்கு வராத மாணவிகள் குறித்த எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பள்ளிக்கு வராத மாணவிகள், திருமணமான மாணவிகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், குழந்தை திருமணங்கள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X