போக்குவரத்து நகருக்கு போக்கு காட்டும் ஊராட்சி; அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

Added : அக் 14, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம் வாணியங்குடி ஊராட்சியிலுள்ள போக்குவரத்து நகரில் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர், ஆசிரியர்கள் வசித்து வருகின்றனர்.ஆயுதப்படை குடியிருப்பு, ரோஸ் நகர் வழியாக இந்நகர் 2.5 கி.மீ., தொலைவில் உள்ளது. அன்றாடம் பஸ்சில் செல்லும் பயணிகளுக்கு வழிகாட்டும் டிரைவர், கண்டக்டரின் குடும்பங்கள் போக்குவரத்து நகரில் அடிப்படை வசதி இல்லாமல் தள்ளாடி

சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம் வாணியங்குடி ஊராட்சியிலுள்ள போக்குவரத்து நகரில் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர், ஆசிரியர்கள் வசித்து வருகின்றனர்.

ஆயுதப்படை குடியிருப்பு, ரோஸ் நகர் வழியாக இந்நகர் 2.5 கி.மீ., தொலைவில் உள்ளது. அன்றாடம் பஸ்சில் செல்லும் பயணிகளுக்கு வழிகாட்டும் டிரைவர், கண்டக்டரின் குடும்பங்கள் போக்குவரத்து நகரில் அடிப்படை வசதி இல்லாமல் தள்ளாடி வருகின்றனர்.கால்வாய் ஆக்கிரமிப்புமக்கள் கருத்துபி.சவுந்திரபாண்டியன்: இந்நகரில் தார்ரோடு, குறுக்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலையின்றி உள்ளது. மழை காலத்தில் தெருக்களில் மழை நீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கின்றன.

குறிப்பாக ஆரியபவன்நகர் முதல் போக்குவரத்து நகர் வரும் ரோட்டில் உள்ள கால்வாய் மடையை ஆக்கிரமித்துவிட்டதால் வல்லனி கண்மாய்க்கு செல்ல வேண்டிய மழை நீர் எங்கள் நகருக்குள் புகுந்து குடியிருப்புகள் மூழ்கி வருகின்றன.குடிநீர் வசதி இல்லைஜி.ரேவதி: நகரில் ஏராளமான வீடுகள், மெயின், குறுக்கு தெருக்கள் இருந்தும் வீட்டு கழிவு நீர் வெளியேற சாக்கடை கால்வாய் கட்டவில்லை. ஊராட்சி சார்பில் பொது, வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு கூட வழங்கவில்லை. இதனால் ஆழ்துளை கிணறு மூலம் உவர்ப்பு நீரை பருகி வருகிறோம். சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுகிறது.

சாலை வசதி இல்லாத நகர்என்.ஆனந்தநாராயணன்: இந்நகருக்கு மெயின் ரோட்டில் தார்ரோடு, குறுக்கு தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் சாலை அமைக்க டெண்டர் விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் பல மாதங்களாக டெண்டர் விட்டும் தார், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் கூட துவங்கவில்லை. இதனால் குண்டும் குழியுமான சாலையில் வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர். நகருக்கு தார், பேவர் பிளாக் சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.இருளில் மூழ்கிய நகர்ஆர். முருகேசன்: நகரில் போதிய மின்கம்பம், மின்விளக்கு வசதிகள் இல்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தோம். அதற்கு பின் இந்நகரில் 3 இடங்களில் புதிய மின்கம்பம், 9 மின்விளக்குகள், ஒரு ைஹமாஸ் விளக்கு அமைத்து தர ஊராட்சியில் இருந்து ரூ.1.07 லட்சத்தை மின்வாரியத்திற்கு செலுத்தி விட்டதாக கூறுகின்றனர். ஆனால் இன்று வரை பணம் எங்களுக்கு வரவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேவை ரேஷன் கடை

ஆர். கனகவள்ளி: இந்நகர் மக்களுக்கு ரேஷன் கடை வசதியில்லை. ஆரியபவன் நகர், போக்குவரத்து நகர், ரோஸ் நகர், முல்லை நகரை மையமாக வைத்து ஒரு புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வாங்க வெகு துாரம் அலைய முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர்.அடிக்கடி மின்தடைஎம்.மாணிக்கம்: காளையார்கோவில் துணை மின் நிலையத்தின் கீழ் இப்பகுதிக்கு மின் வினியோகம் செய்கின்றனர். இரவில் எந்தவித முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு செய்கின்றனர். இதனால் நள்ளிரவில் திருடர்கள் அச்சத்தில் தவிக்கிறோம். மின்வாரியம் தடையின்றி குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X