தமிழ்நாடு

உலக கை கழுவும் தினம்; பள்ளி மாணவியர் உறுதிமொழி ஏற்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி, அக்., 15ல், உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக ஆசிரியர்கள் பேசுகையில், 'கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவது தான் முறையான கைகழுவுதல் ஆகும்.இதன் வாயிலாக, காலரா,
 உலக கை கழுவும் தினம்; பள்ளி மாணவியர் உறுதிமொழி ஏற்பு

உடுமலை : உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி, அக்., 15ல், உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக ஆசிரியர்கள் பேசுகையில், 'கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவது தான் முறையான கைகழுவுதல் ஆகும்.இதன் வாயிலாக, காலரா, மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த்தாக்குதலை தடுக்க முடியும். அவ்வகையில், கை கழுவ, 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கை கழுவுதல் என்பது ஒரு சிறிய செயல்தான். அதை முறையாகச்செய்ய வேண்டும். குறிப்பாக, எந்த ஒரு செயலை செய்த பின்னும் கைகளை முறையாகக் கழுவ வேண்டும்,' விளக்கமாக அறிவுறுத்தினர்.இதையடுத்து, மாணவியர், 'தினமும் சோப்பு போட்டு கைகழுவும் பழக்கத்தைக் கடைபிடிப்பேன். கை கழுவும் முறையை பிறருக்கு சொல்லிக்கொடுப்பேன். அதோடு கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அதன் நன்மையைப் புரிய வைப்பேன்,' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X