சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் ரூ.4 லட்சம்! பால் வியாபாரிக்கு 'ஷாக்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
பல்லடம்:வீட்டு மின் கட்டணம் 3.93 லட்சம் ரூபாய் என்பதைப் பார்த்து, பால் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டி - கோம்பக்காடு புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 56; பால் வியாபாரி. இவர் தன் வீட்டு மின் கட்டணம் குறித்து தெரிந்து கொள்ள ஆன்லைனில் பார்த்தபோது, 3 லட்சத்து 93 ஆயிரத்து 374 ரூபாய் என இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
 மின் கட்டணம் ரூ.4 லட்சம்! பால் வியாபாரிக்கு 'ஷாக்'

பல்லடம்:வீட்டு மின் கட்டணம் 3.93 லட்சம் ரூபாய் என்பதைப் பார்த்து, பால் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டி - கோம்பக்காடு புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 56; பால் வியாபாரி. இவர் தன் வீட்டு மின் கட்டணம் குறித்து தெரிந்து கொள்ள ஆன்லைனில் பார்த்தபோது, 3 லட்சத்து 93 ஆயிரத்து 374 ரூபாய் என இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

ஆறுமுகம் கூறுகையில், ''வழக்கமாக மின் கட்டணம் 800 முதல் 1,000 ரூபாய்க்குள் வரும். ஆனால், கடந்த மாத மின் கட்டணம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 374 ரூபாய் என இருந்தது.''மின் வாரிய ஊழியர்களிடம் கேட்டதற்கு, 'ரீடிங்' எடுக்கும்போது ஏதாவது தவறு ஏற்பட்டிருக்கும். சென்னைக்கு அனுப்பி சரி செய்தபின் கூறுகிறோம். இதற்கு 10 நாட்கள் ஆகலாம். அதுவரை மின் கட்டணம் செலுத்த வேண்டாம் எனக் கூறினர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X