பொது செய்தி

தமிழ்நாடு

பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மார்க்கெட்டில் மக்களும், ரோட்டில் வாகனங்களும் நெரிசல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜை பொருள் விற்பனை நேற்று அமோகமாக இருந்தது. நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறியது.கடந்த இரு நாட்களாக வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் சுத்தம் செய்து பூஜைக்கு தயார்படுத்தும் பணி பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. கட்டடங்கள்
 பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்    மார்க்கெட்டில் மக்களும், ரோட்டில் வாகனங்களும் நெரிசல்


திருப்பூர் : இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜை பொருள் விற்பனை நேற்று அமோகமாக இருந்தது. நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறியது.கடந்த இரு நாட்களாக வீடுகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் சுத்தம் செய்து பூஜைக்கு தயார்படுத்தும் பணி பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

கட்டடங்கள் துாய்மைப்படுத்தி, கழிவுகள் அகற்றுதல், வாசல் மெழுகுதல், கோலமிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கடைவீதியில் பரபரப்புமேலும் இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், பூஜைப் பொருட்கள் விற்பனை நகர கடை வீதிகளில் பரபரப்பாக காணப்பட்டது. கடைவீதியில் உள்ள கடைகளிலும், பண்டிகை கால ரோட்டோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட் மற்றும் கடை வீதியில் உள்ள கடைகளில் பூஜைப் பொருள் வாங்க மக்கள் திரண்டனர். பூஜைப் பொருட்களான வாழை, கரும்பு, பூ, பூமாலை, மாவிலை, பழ வகைகள், பொரி, கடலை, மிட்டாய் விற்பனை நேற்று காலை முதல் மாலை வரை இருந்தது.பொருட்கள் வாங்க வந்த மக்கள் மற்றும் அவர்கள் வாகனங்கள் அதிகளவில் கடை வீதிகளில் காணப்பட்டது.

இதனால், முக்கிய ரோடுகள் அனைத்திலும் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.தொழிலாளர் பயணம்ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு இரு நாள் விடுமுறையும், தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை நாளாக உள்ளது. இதையொட்டி ஏராளமானோர் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டனர். இதனால், திருப்பூரிலிருந்து செல்லும் வெளி மாவட்ட பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சொந்த வாகனங்களும் அதிகளவில் அணிவகுத்த நிலையில், நகரின் பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X