சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி கலெக்டர் நடவடிக்கை 42 பேரின் பட்டாக்கள் ரத்து 56 ஏக்கர் அரசு நிலமாக பதிவு

Added : அக் 14, 2021
Share
Advertisement
தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் 42 பேரின் பட்டாக்களை ரத்து செய்து 56 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீண்டும் அரசு நிலமாக கலெக்டர் முரளீதரன் பதிவு செய்தார்.இந்த பேரூராட்சியில் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் 42 பேருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இதுதொடர்பாக சர்வேயர் பிச்சை மணி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 42 பேரின் பட்டாக்களும் ரத்து

தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் 42 பேரின் பட்டாக்களை ரத்து செய்து 56 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீண்டும் அரசு நிலமாக கலெக்டர் முரளீதரன் பதிவு செய்தார்.

இந்த பேரூராட்சியில் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் 42 பேருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இதுதொடர்பாக சர்வேயர் பிச்சை மணி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 42 பேரின் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன. பதிவுத்துறை விதிகள்படி நில ஆவண மாற்றத்தை ரத்து செய்து 56 ஏக்கரை மீண்டும் அரசு நிலமாக கலெக்டர் முரளீதரன் பதிவு செய்தார். மாவட்டத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு, அபகரிப்பு செய்யும் நபர்கள், உதவும் அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

ஏற்கனவே வடவீரநாயக்கன்பட்டியில் ரூ.94 லட்சம் மதிப்பிலான 94.65 ஏக்கர் புறம்போக்கு நிலம் 27 பேருக்கு பட்டா போடப்பட்டது. இதுவும் சமீபத்தில் அரசு நிலமாக மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, தேர்தல் துணை தாசில்தார்கள் மோகன் ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர் சக்திவேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த 2 சம்பவங்களில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், பணியாளர்கள் என 6 பேர், பட்டா பெற்ற 69 பேர் மீது பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் புகாரில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X