பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜை; பூக்கள் விலை 'விர்ர்' ; மழையால் குறைந்தது வரத்து

Added : அக் 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : நவராத்திரி பண்டிகையின் நிறைவாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில், கல்வி உபகரணங்களுக்கும், வாகனங்கள், தொழில்நுட்ப கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை பூஜிப்பது வழக்கம். இதற்காக, கனரக வாகனங்கள் முதல், இருசக்கர வாகனங்கள் வரை, மலர் மாலை அணிவிக்கப்படும். பூக்களுக்கான தேவையும், விலையும் அதிகரிப்பது வழக்கம். இந்தாண்டு, கடந்த சில வாரங்களாக
 ஆயுத பூஜை; பூக்கள் விலை 'விர்ர்' ;  மழையால் குறைந்தது வரத்து


பொள்ளாச்சி : நவராத்திரி பண்டிகையின் நிறைவாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நாட்களில், கல்வி உபகரணங்களுக்கும், வாகனங்கள், தொழில்நுட்ப கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை பூஜிப்பது வழக்கம். இதற்காக, கனரக வாகனங்கள் முதல், இருசக்கர வாகனங்கள் வரை, மலர் மாலை அணிவிக்கப்படும். பூக்களுக்கான தேவையும், விலையும் அதிகரிப்பது வழக்கம். இந்தாண்டு, கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்வதால், மாலை கட்ட அதிகம் பயன்படும் செண்டு மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.வரத்தும் குறைந்து, தேவையும் அதிகரித்துள்ளதால், விலை மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது.

நேற்று பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ செவ்வந்தி, 220 - 250 ரூபாய் நிலவரத்தில் விற்றது.செண்டு மல்லி, 60 - 70; அரளி, 400 - 450; குண்டு மல்லி, 600 - 700; முல்லை, 550 - 600; ஜாதிமல்லி, 400 - 450; ரோஜா, 200 - 220; தவனம் (மருகு) ஒரு கட்டு, 40; மரிக்கொழுந்து ஒரு கட்டு, 40 ரூபாய் நிலவரத்தில் விற்பனையானது.உள்ளூரில் பூக்கள் உற்பத்தி மிகக்குறைவாக உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக விலை கொடுத்து பூ ரகங்கள் வாங்கி வந்து விற்பதும், விலை உயர்வுக்கு காரணம் என பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.மார்க்கெட்டில் பூ வாங்கி, சில்லரை விற்பனை செய்பவர்களும், மாலை கட்டி விற்பவர்களும் நேற்று பூக்கள் வாங்க திரண்டதால், பூ மார்க்கெட் மற்றும் சுற்றுப்பகுதி கடும் நெரிசலுடன் காணப்பட்டது.

அதேபோன்று, கரும்பு ஜோடி 100 ரூபாய்க்கும்; வாழைக்கன்று ஜோடி 30 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வீடுகள், தொழிற்சாலைகளில் வழிபாடு செய்வதற்காக, மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X