பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளை பத்திரமாக பாருங்கள் பெற்றோர்களே

Added : அக் 14, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் சிறுவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இத்தாலுகாவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறிய பெரிய கண்மாய், குளங்கள் உள்ளன. பலவற்றில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி சில நீர்நிலைகள் ததும்பி வழிந்து மறுகால் பாய்கிறது.குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட கண்மாய்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் சிறுவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தாலுகாவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறிய பெரிய கண்மாய், குளங்கள் உள்ளன. பலவற்றில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி சில நீர்நிலைகள் ததும்பி வழிந்து மறுகால் பாய்கிறது.குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட கண்மாய் ,குளங்களில் பள்ளங்கள் உள்ள நிலையில் சிறுவர்களை அவற்றின் அருகில் செல்லாமல் பெற்றோர்கள் விலக்கி வைத்திருக்க வேண்டும்.

ஆறுகள் தனிநபர் தோட்டங்கள் பலவற்றில் மணல் அள்ளிய பள்ளங்கள் ஏராளம் உள்ள நிலையில் அவையும் ததும்பி வழியும் ஆபத்துகளாகவே காட்சியளிக்கிறது.கடந்த காலங்களில் இப்பகுதியில் சில சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில், இனிமேல் அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X