சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனிம வளத்துறைக்கு எதிராக மறியல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
சத்திரப்பட்டி : கண்மாய்க்கரை பலப்படுத்துவதற்காக மண் அள்ளிய ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக, கனிமவளத்துறை அதிகாரி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சத்திரப்பட்டி அருகே மேலராஜ குலராமன் ஊராட்சியில் உள்ள சங்கம்பட்டி கண்மாய் துார்வாரி கரையை பலப்படுத்த ஊராட்சி தலைவர் கோரினார். இதற்கு தாசில்தார் வாய்மொழி உத்தரவிட்டார். அதன்படி

சத்திரப்பட்டி : கண்மாய்க்கரை பலப்படுத்துவதற்காக மண் அள்ளிய ஊராட்சி நிர்வாகத்திற்கு எதிராக, கனிமவளத்துறை அதிகாரி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சத்திரப்பட்டி அருகே மேலராஜ குலராமன் ஊராட்சியில் உள்ள சங்கம்பட்டி கண்மாய் துார்வாரி கரையை பலப்படுத்த ஊராட்சி தலைவர் கோரினார். இதற்கு தாசில்தார் வாய்மொழி உத்தரவிட்டார். அதன்படி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் மூலம் பணிகள் நடந்தன. ஆய்வுக்கு வந்த கனிம வளத் துறை துணை தாசில்தார் திருக்கண்ணன், முனியாண்டி கண்மாயில் மண் திருடியதாக வாகனங்களை பறிமுதல் செய்து கீழராஜகுலராமன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இரவு 9:30க்கு மேல் 200க்கு மேற்பட்டோர் வாகனங்களை விடுவிக்க கோரி சத்திரப்பட்டி ஆலங்குளம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் ராமச்சந்திரன், டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வாகனங்களை விடுவிக்க மறியல் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X