பொது செய்தி

தமிழ்நாடு

பாசன நீரை எதிர்பார்த்து 10 ஆண்டுக்கு பின் கால்வாயை தூர் வாரிய சோழபுரம் மக்கள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
இதிலிருந்து 130 கண்மாய்களுக்கு நீர் சென்று 6748 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஷீல்டு கால்வாயிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் போதுமான அளவிற்கு கடைமடைப்பகுதியான சோழபுரத்திற்கு கிடைப்பதில்லை.10 ஆண்டுகளாக கால்வாயில் நீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. இந்தாண்டு பெரியாறு அணையில் போதுமான நீர் இருப்பு இருப்பதாலும், தொடர்ந்து அந்தப்பகுதியில் மழை பெய்து வருவதாலும்,

இதிலிருந்து 130 கண்மாய்களுக்கு நீர் சென்று 6748 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஷீல்டு கால்வாயிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் போதுமான அளவிற்கு கடைமடைப்பகுதியான சோழபுரத்திற்கு கிடைப்பதில்லை.

10 ஆண்டுகளாக கால்வாயில் நீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளது. இந்தாண்டு பெரியாறு அணையில் போதுமான நீர் இருப்பு இருப்பதாலும், தொடர்ந்து அந்தப்பகுதியில் மழை பெய்து வருவதாலும், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தேவையான அனைத்து கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துள்ளதால் பாசன கண்மாய்கள் நிறைந்துள்ளது. இதன் காரணமாக சேதுநகர், வீரப்பட்டி, மேலப்பூங்குடி, சாலுார், சிலுவினிப்பட்டி, நாலுகோட்டை, சோழபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 34 கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாமல் இருந்தது.

தற்போது பொதுப்பணித்துறையினர் சோழபுரம் பகுதிக்கு பாசன நீர் வழங்க முன் வந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஷீல்டு கால்வாயில் பாசன நீர் வரத்துக்கு இடையூறாக இருந்த முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.இப்பகுதியில் இன்று பாசன நீர் வருவதற்கு வாய்ப்புள்ளது. விவசாயிகள் 10 ஆண்டுகளுக்குப்பின் வரும் பெரியாறு ஷீல்டு கால்வாய் பாசன நீரை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர். இப்பகுதிக்கு பாசன நீர் கிடைக்கும் பட்சத்தில் 2500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X