பொது செய்தி

தமிழ்நாடு

பசும்பொன்னில் மக்களுக்கு அனுமதி இல்லை: கலெக்டர் தகவல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அக்., 28, 29, 30ல் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா நடக்கிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் காமாட்சி கணேசன் தெரிவித்தார்.பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம், பிரமுகர்கள் மரியாதை செலுத்த வரும் பாதையில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் காமாட்சி கணேசன், எஸ்.பி., கார்த்திக்

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அக்., 28, 29, 30ல் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா நடக்கிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் காமாட்சி கணேசன் தெரிவித்தார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம், பிரமுகர்கள் மரியாதை செலுத்த வரும் பாதையில் பாதுகாப்பு குறித்து கலெக்டர் காமாட்சி கணேசன், எஸ்.பி., கார்த்திக் ஆய்வு செய்தனர். பின் கலெக்டர் கூறியதாவது:குருபூஜை விழா அரசு விழா என்பதால் முதல்வர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் மரியாதை செலுத்த அனுமதி இல்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் 5 நபர்களுக்கு மிகாமல் 3 வாகனங்களில் வருவதற்கு கலெக்டர் அலுவலகத்தில் முன் அனுமதி பெறவேண்டும்.ஒலிபெருக்கி, சமுதாய கொடி, விளையாட்டு போட்டி, ஜோதி ஓட்டம், பால்குடம், முளைப்பாரி, தலைவர்கள் வேடமணிந்து வருதல் உட்பட ஊர்வலம் முதலியவற்றிற்கு அனுமதி இல்லை.

அன்னதானக் கூடம் அமைத்து அன்னதானம் வழங்க, பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி இல்லை. அஞ்சலி செலுத்த வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டும் வர வேண்டும். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X