பொது செய்தி

தமிழ்நாடு

7.5 கிலோ வெள்ளி கவசம் திருட்டு கோவிலில் திருடிய 'பலே' ஆசாமி 'லபக்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர், பெருந்தொழுவு, அமராவதிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், மணிராஜ் சிவம், 50 என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த, 3 ம் தேதி பூஜைகள் முடித்த பின், கோவிலை பூட்டி சென்றார்.மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உற்சவ மூர்த்திகளின் வெள்ளி பொருட்கள், தங்க தாலி பொட்டு ஆகியவைதிருடு போனது தெரிய வந்தது.


திருப்பூர் : திருப்பூர், பெருந்தொழுவு, அமராவதிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், மணிராஜ் சிவம், 50 என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

கடந்த, 3 ம் தேதி பூஜைகள் முடித்த பின், கோவிலை பூட்டி சென்றார்.மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உற்சவ மூர்த்திகளின் வெள்ளி பொருட்கள், தங்க தாலி பொட்டு ஆகியவைதிருடு போனது தெரிய வந்தது. புகாரின் பேரில், நல்லுார் போலீசார் விசாரித்தனர்.இதனால், தனிப்படை போலீசார் ரகசிய தகவலின்படி விருதுநகர் மாவட்டத்தில் முகாமிட்டு கோவில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி, 52 மற்றும் அதே பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன், 50 ஆகியோரை கைது செய்து, 3 கிராம் தங்கம், 7.5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:கோவில் திருட்டில் ஈடுபட்ட, இரண்டு பேர் மீது திருப்பூர், ஈரோடு, பெரியகுளம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோவில், வீடு திருட்டு, வழிப்பறி என பல வழக்குளில் தொடர்புடையவர்கள்.

இருவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். கோவிலில் திருடி விட்டு, அருகே உள்ள வீடு ஒன்றில், 3 ஆயிரம் ரூபாயை திருடி சென்றது தெரிந்தது. இருவர் கைது செய்யப்பட்டு, வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X