தபால் தலை கண்காட்சி; மாணவர்கள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தபால் தலை கண்காட்சி; மாணவர்கள் ஆர்வம்

Added : அக் 14, 2021
Share
காரைக்குடி : தேசிய அஞ்சலக வார விழா அக்.9 முதல் அக்.16 வரை அகில இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அக்.13 சிறப்பு தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்பட்டது.காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் தபால் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட, மற்றும் சிறப்பு வாய்ந்த தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன.

காரைக்குடி : தேசிய அஞ்சலக வார விழா அக்.9 முதல் அக்.16 வரை அகில இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அக்.13 சிறப்பு தபால் தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் தபால் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட, மற்றும் சிறப்பு வாய்ந்த தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை ராமநாதன் செட்டியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தபால் தலை சேகரிப்பாளர் குப்பு மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

மாணவர்களிடம் பேசிய அதிகாரிகள், தபால் தலைகள் சேகரிக்கும் கலையானது பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.மாணவர்கள் தபால்தலை சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இது வெறும் தபால் தலை சேகரிப்பாக மட்டுமின்றி, நமது கலை பண்பாடு, கலாச்சாரத்தை வெளிக்கொணருவதாக அமையும் என்றனர். நிகழ்ச்சியில், கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது, உதவி கண்காணிப்பாளர் சதீஸ்குமார், அஞ்சல் ஆய்வாளர் டென்னிஸ்தாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X