பெரியகுளம் ஆய்வகத்தை தேனிக்கு மாற்ற இயக்குனருக்கு பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளம் ஆய்வகத்தை தேனிக்கு மாற்ற இயக்குனருக்கு பரிந்துரை

Added : அக் 14, 2021
Share
தேனி : பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் இயங்கும் ஆய்வகத்தை, தேனிக்கு மாற்ற கோரி துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், சுகாதாரத்துறை இயக்குனருக்கு பரிந்துறை செய்தார்.இங்கு பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ ஆய்வகம் உள்ளது. இதில் தொழில்நுட்ப உதவியாளர், மைக்ரோ பயாலாஜிஸ்ட்,உதவியாளர் பணிபுரிகின்றனர். இவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் சேகரிக்கும் ரத்த

தேனி : பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் இயங்கும் ஆய்வகத்தை, தேனிக்கு மாற்ற கோரி துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், சுகாதாரத்துறை இயக்குனருக்கு பரிந்துறை செய்தார்.

இங்கு பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ ஆய்வகம் உள்ளது. இதில் தொழில்நுட்ப உதவியாளர், மைக்ரோ பயாலாஜிஸ்ட்,உதவியாளர் பணிபுரிகின்றனர். இவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் சேகரிக்கும் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும். ஆனால், மாவட்ட அரசு மருத்துவமனை பணியினை மேற்கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பொது சுகாதாரத்துறை வழங்கும் ரத்த மாதிரி ஆய்வுப் பணிகள் முடங்கிறது. எனவே, ஆய்வகத்தை தேனி பொது சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலக வளகாகத்திற்கு மாற்ற கோரி துணை இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X