பொது செய்தி

தமிழ்நாடு

'மாதம் ஒரு முறை மார்பக சுயபரிசோதனை அவசியம்'

Added : அக் 14, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகளுக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகேஸ்ஆனந்தி கலந்து கொண்டு பேசியதாவது:மார்பக புற்று நோய் குறித்து, பெண்கள் சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அடிப்படையான உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு,
 'மாதம் ஒரு முறை மார்பக சுயபரிசோதனை அவசியம்'

வால்பாறை : வால்பாறை அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகளுக்கான மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகேஸ்ஆனந்தி கலந்து கொண்டு பேசியதாவது:மார்பக புற்று நோய் குறித்து, பெண்கள் சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அடிப்படையான உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, புற்றுநோயாக தோன்றுகிறது. இதனால், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கட்டாயம், மாதம் ஒரு முறை, மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது.இது குறித்து டாக்டரிடம் கூற பெண்கள் ஒரு போதும் தயங்க கூடாது.

ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் பகுதியிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் பகுதிகளிலும், புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணப்படுத்தலாம். புற்று நோய் வராமல் தடுக்க, பெண்கள் மிகவும் எச்சரிகையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X