சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினிமா ஆசைகாட்டி மோசடி செய்தவர் ராமேஸ்வரத்தில் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி ராமேஸ்வரத்தில் பெண்ணிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் இமானுவேல்ராஜா 43. முகநுாலில் தன் பெயர் சிவசக்தி, சினிமா இயக்குனர் என போலியாக பதிவேற்றம் செய்து பல பகுதி பெண்களிடம் நடிக்க வைப்பதாகக் கூறி 'தொடர்பு' வைத்துக் கொண்டார். அதனை வீடியோ எடுத்து மிரட்டி

ராமேஸ்வரம்:சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி ராமேஸ்வரத்தில் பெண்ணிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் இமானுவேல்ராஜா 43. முகநுாலில் தன் பெயர் சிவசக்தி, சினிமா இயக்குனர் என போலியாக பதிவேற்றம் செய்து பல பகுதி பெண்களிடம் நடிக்க வைப்பதாகக் கூறி 'தொடர்பு' வைத்துக் கொண்டார். அதனை வீடியோ எடுத்து மிரட்டி அப்பெண்களிடம் பணம் பறித்து சொகுசாக வாழ்ந்தார்.சமீபத்தில் ராமேஸ்வரம் வந்த இமானுவேல்ராஜா புதுரோட்டைச் சேர்ந்த கார்த்திக்ராஜாவிடம் பழகினார்.

ராமேஸ்வரத்தில் சொகுசு விடுதியில் தங்கி இருந்த இமானுவேல்ராஜாவிடம் துப்பாக்கி இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்ததில் அது போலி துப்பாக்கி என தெரியவந்தது.ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசனிடம், இமானுவேல்ராஜாவை ஒப்படைத்தனர். அப்போது கார்த்திக்ராஜா மனைவி மகேஸ்வரி 28, சினிமாவில் நடிக்க வைப்பதாகக்கூறி இமானுவேல்ராஜா ரூ. 1.50 லட்சம் வாங்கி ஏமாற்றியதாகவும், பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து சென்னை மண்ணுார் பேட்டையைச் சேர்ந்த சரவணன், தனது அக்காவிடம் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கித்தருவதாக கூறி ராமேஸ்வரம் வரவழைத்து, சொகுசு அறையில் இமானுவேல்ராஜா தங்க வைத்துள்ளார். பின் மயக்க மருந்து கொடுத்தும், துப்பாக்கியை காட்டி மிரட்டியும் அக்கா, அவரது தோழியிடம் ரூ.4.50 லட்சம் வாங்கியுள்ளார்.பின் படகு சவாரிக்கு அழைத்து சென்று ரகசியமாக படம் எடுத்து, இதுகுறித்து வெளியே சொன்னால் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்' என ராமேஸ்வரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.துாத்துக்குடி, சென்னையில் பல திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இமானுவேல் ராஜாவை துாத்துக்குடி போலீசார் குண்டாசில் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்தவர் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து மன்மதனாக வாழ்ந்துள்ளார். அவரது அலைபேசியை போலீசார் ஆய்வு செய்ததில், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனிமையில் இருந்த வீடியோ இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X