தமிழ்நாடு

பறவைகள் சரணாலயமாகுமா, நஞ்சராயன் குளம்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திருப்பூர் : நஞ்சராயன்குளம் மேம்பாடு செய்து, பறவைகள் சரணாலயம் அமைப்பது குறித்து திருப்பூர் இயற்கை கழகம், எம்.எல்.ஏ.,விடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.திருப்பூர் நகரை ஒட்டி அமைந்துள்ள நஞ்சராயன் குளம், 450 ஏக்கர் பரப்பு கொண்டது. நல்லாற்றிலிருந்து இந்த குளத்துக்கு நீர் ஆதாரம் கிடைக்கிறது. இந்த குளத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் பறவைகள், பல்வேறு
 பறவைகள் சரணாலயமாகுமா, நஞ்சராயன் குளம்!   இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


திருப்பூர் : நஞ்சராயன்குளம் மேம்பாடு செய்து, பறவைகள் சரணாலயம் அமைப்பது குறித்து திருப்பூர் இயற்கை கழகம், எம்.எல்.ஏ.,விடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பூர் நகரை ஒட்டி அமைந்துள்ள நஞ்சராயன் குளம், 450 ஏக்கர் பரப்பு கொண்டது. நல்லாற்றிலிருந்து இந்த குளத்துக்கு நீர் ஆதாரம் கிடைக்கிறது. இந்த குளத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக ஆண்டுதோறும் பல்லாயிரம் பறவைகள், பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் இங்கு வந்து தங்கி செல்கின்றன.

இதனை பறவைகள் சரணாலயமாக மாற்றி பராமரிக்கவும், குளத்தை முறையாக முறையாக துார் வாரி, நீர் வற்றாமல் தேங்கும் விதமாகவும், குளத்தின் கரையில் பொழுது போக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கவும்; குளத்துக்கு வரும் நீர் அதில் சேகரமாகும் முன் சுத்திகரிப்பு செய்து, கழிவுகளற்ற குளமாக பராமரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் இயற்கை கழகம் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, 2014 மற்றும் 2020ல் ஆண்டுகளில் வனத்துறையினர் இதற்கான ஆய்வும் மேற்கொண்டனர்.அதன் தொடர்ச்சியாக, இயற்கை கழக நிர்வாகிகள் ரவீந்திரன், ராம்குமார் மற்றும் நல்லசிவம் ஆகியோர் நேற்று திருப்பூர் தெற்கு தொகுதிஎம்.எல்.ஏ., செல்வராஜை சந்தித்து இது குறித்து விளக்கினர். திருப்பூருக்கு பறவைகள் சரணாலயம் ஏற்படுத்தும் நிலையில் இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும்.

இந்த சந்திப்பின் போது, நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்பது குறித்தும், தொடர் நடவடிக்கைகள் குறித்தும் 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் வெளியான செய்திகளின் தொகுப்பு மற்றும் குளத்துக்கு 'வலசை' வரும் பறவையினங்களின் போட்டோ ஆல்பம் ஆகியன எம்.எல்.ஏ.விடம் வழங்கப்பட்டது.நஞ்சராயன் குளத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக ஆண்டுதோறும்பல்லாயிரம் பறவைகள், பல்வேறுவெளிநாடுகளிலிருந்தும் இங்கு வந்து தங்கி செல்கின்றன.'திருப்பூருக்கு பெருமை'

உறுதியளித்த எம்.எல்.ஏ.,


நஞ்சராயன் குளத்தை, பறவைகள் சரணாலயமாக மாற்றுவது குறித்து, எம்.எல்.ஏ.,செல்வராஜ் கூறுகையில், ''பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை இருந்து வருவதை அறிந்தேன். நம் திருப்பூரில், ஒரு பறவைகள் சரணாலயம் அமைவது நமக்குத்தான் பெருமை. பல்லாயிரம் மைல்கள் தாண்டி, பறந்து வரும் பறவைகளுக்கு திருப்பூரின் வேடந்தாங்கலாக நஞ்சராயன் குளம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. கண்டிப்பாக இது குறித்து, முதல்வரிடம் தனிப்பட்ட கவனத்துக்கு கொண்டு சென்று, முயற்சி எடுப்பேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X