தமிழ்நாடு

பண்டிகை காலங்களில் கொரோனா, டெங்கு குறித்து கவனம் தேவை

Added : அக் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'பண்டிகை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் டெங்கு மற்றும் கொரோனா பரவலை மனதில் கொண்டு கவனமுடன் இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு 32 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டு 32 ஆயிரத்து 162 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 136 பேர் சிசிச்சை பெறுகின்றனர். இதுவரை 640 பேர் உயிரிழந்துள்ளனர்.முதல் அலையை விட 2ம்

திண்டுக்கல் : 'பண்டிகை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் டெங்கு மற்றும் கொரோனா பரவலை மனதில் கொண்டு கவனமுடன் இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு 32 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டு 32 ஆயிரத்து 162 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 136 பேர் சிசிச்சை பெறுகின்றனர். இதுவரை 640 பேர் உயிரிழந்துள்ளனர்.முதல் அலையை விட 2ம் அலையில் பாதிப்பு 3 மடங்காக இருந்தது. 3ம் அலை குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பண்டிகை காலங்கள் நெருங்கி வருகின்றன.அக்டோபர் மாத இறுதியில் தான் கொரோனா 3ம் அலை அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வணிக வளாகங்களில் அலைமோதுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் தொற்று பரவ வழிவகுத்துவிடும்.

மழைக்காலம் நெருங்கிவிட்டதால், டெங்கு குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது உட்பட வழிகாட்டுதலை பின்பற்றினாலே நோய் பரவல் பற்றி கவலைப்பட தேவையில்லை என சுகாதாரத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X