பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரில் மிதக்கும் ஏலத்தோட்டங்கள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கம்பம் : இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் ஏலத்தோட்டங்கள் தண்ணீரில் மிதக்கிறது.இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. புத்தடி, சங்குண்டான், மாலி, சக்குபள்ளம், சாஸ்தான்நடை, மாதவன்கானல், மேப்பாறை, வெங்கலப்பாறை, சுல்தானியா, புளியன்மலை, வண்டன்மேடு, அந்நியார்தொழு பகுதிகளில் இரண்டு வாரங்களாக பெய்த மழை இரண்டு நாட்களாக கனமழையாக

கம்பம் : இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் ஏலத்தோட்டங்கள் தண்ணீரில் மிதக்கிறது.

இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. புத்தடி, சங்குண்டான், மாலி, சக்குபள்ளம், சாஸ்தான்நடை, மாதவன்கானல், மேப்பாறை, வெங்கலப்பாறை, சுல்தானியா, புளியன்மலை, வண்டன்மேடு, அந்நியார்தொழு பகுதிகளில் இரண்டு வாரங்களாக பெய்த மழை இரண்டு நாட்களாக கனமழையாக மாறியுள்ளது.இதனால் ஏலத்தோட்டங்களில் வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓணத்திற்கு பின் மழை குறையும் என்றிருந்தநிலையில் கனமழை பெய்வது விவசாயிகள் கவலையடையந்துள்ளனர். பல தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

ஏலவிவசாயி அருண்பிரசாத் கூறுகையில். 'தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்தால் பூக்கள் காய் பிடிக்க தகுதியற்றதாக மாறும். இதனால் மகசூல் குறையும், அழுகல் நோய் தாக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X