போடி : போடி நகராட்சி பகுதி யில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன் தலைமையில் இறைச்சி, பழக்கடை, குளிர்பான கடைகளில் ஆய்வு நடந்தது. சுகாதாரகேடான வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள், கெட்டு போன மீன்கள், மெழுகு தடவிய ஆப்பிள்கள், கலப்பட டீத்துாள், சுகாதாரமின்றி விற்பனைக்கு இருந்த உணவு பண்டங்கள், பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சுகன்யா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்த்தான் உடன் இருந்தனர்.