பொது செய்தி

தமிழ்நாடு

செவ்வந்திப்பூ அறுவடை தீவிரம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கூடலூர் : சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கூடலூரில் செவ்வந்திப் பூ அறுவடை தீவிரம் அடைந்தது.கூடலூர், கம்பத்தில் 3000 ஏக்கருக்கு மேல் செவ்வந்திப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் கோயில்கள் முழுமையாக திறக்கப் படவில்லை. இதனால் அறுவடை செய்ய முடியாமல் பூக்கள் வீணானது. சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது கிலோ ரூ. 50 -க்கு

கூடலூர் : சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கூடலூரில் செவ்வந்திப் பூ அறுவடை தீவிரம் அடைந்தது.

கூடலூர், கம்பத்தில் 3000 ஏக்கருக்கு மேல் செவ்வந்திப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் கோயில்கள் முழுமையாக திறக்கப் படவில்லை. இதனால் அறுவடை செய்ய முடியாமல் பூக்கள் வீணானது. சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது கிலோ ரூ. 50 -க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது சில நாட்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பூக்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.விவசாயிகள் கூறும்போது, 'கிலோவுக்கு ரூ. 150 விற்பனையாகிறது. இங்கு அறுவடை செய்யும் பூக்கள் தேனி, மதுரை, திருச்சி மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன. விரைவில் கோயில்கள் முழுமையாக திறக்கப்பட்டால் பூ விவசாயத்திற்கு பாதிப்பு இருக்காது', என்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X