பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றுக்குள் அடர்ந்த கருவேல மரங்கள்; அப்புறப்படுத்த வலியுறுத்தல்

Added : அக் 14, 2021
Share
Advertisement
வேடசந்துார் : குடகு மலையில் உருவாகி ஆத்தூர், தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக பாய்ந்து கரூர் காவிரி ஆற்றில் கலக்கிறது குடகனாறு. இந்த ஆற்றின் குறுக்கே, அழகாபுரியில் அணை கட்டப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் மணல் பாங்காய் விளங்கிய இந்த குடகனாறு, தற்போது கருவேல மரங்கள் நிறைந்த காடாக காட்சியளிக்கிறது. வேடசந்தூர் நகருக்குள் செல்லும் போது

வேடசந்துார் : குடகு மலையில் உருவாகி ஆத்தூர், தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக பாய்ந்து கரூர் காவிரி ஆற்றில் கலக்கிறது குடகனாறு.

இந்த ஆற்றின் குறுக்கே, அழகாபுரியில் அணை கட்டப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் மணல் பாங்காய் விளங்கிய இந்த குடகனாறு, தற்போது கருவேல மரங்கள் நிறைந்த காடாக காட்சியளிக்கிறது. வேடசந்தூர் நகருக்குள் செல்லும் போது கழிவுநீர் குட்டையாக மாறிவிடுகிறது. மாசுபடுத்தும் வகையில் மண்டிக் கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்து, ஆற்றின் புனிதம் காக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஒரு காலத்தில் இந்த ஆற்றுக்கு சென்று குளிப்பது, துணி துவைப்பது, மீன் பிடிப்பது என மக்கள் நடமாட்டம் பரபரப்பாக இருந்தது. ஆற்றுப் பகுதிக்கு சென்று வருவதை ஒரு பொழுது போக்காக மக்கள் கருதினர். ஆனால் இன்று குடகனாற்றில் கால் வைக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடகனாற்றின் மணல் வளத்தை லாரிகள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் பகிரங்கமாக கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இதனை அதிகாரிகளும் காவல் துறையினரும் கைகட்டி வேடிக்கை பார்த்ததால் இன்று குடகனாறே காணாமல் போய், முட்கள் நிறைந்த காடாக காட்சி அளிப்பது பரிதாபநிலைதான்.

இந்த நீர்வழித்தடத்தில் நிறைந்துள்ள அனைத்து கருவேல மரங்களையும் முறையாக அகற்றி, தூர்வாரி அதனை ஆறாக வழிநடத்திச் செல்ல மாவட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் இன்றைய வலியுறுத்தலாக உள்ளது. பொதுமக்கள் கருத்து-:

ஆற்றை சுத்தம் செய்யுங்கள்என். கொண்டப்பன், குண்ணம்பட்டி: குடகனாறு 1985ல் மணல் பாங்கான பகுதியாக, வற்றாத நதியாக ஓடும். வெயில் காலங்களில் குடகனாறு வற்றினாலும், ஊற்று தோண்டி தண்ணீர் பிடித்து வந்தனர். ஆனால் இப்போது இந்த குடகனாறு முட்கள் நிறைந்த காடாக காட்சியளிக்கிறது.

வேடசந்தூர் நகர் பகுதி ஆற்றுக்குள் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆற்றுக்குள் இறங்கவே மக்கள் அச்சப்படுகின்றனர். ஆற்றுப் பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்திருப்பதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக் காலங்களில் குப்பையும் நிறைந்து, தேங்கும் தண்ணீர் நகர் பகுதிக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. தாடிக்கொம்பு பாலத்தில் இருந்து அணை பகுதி வரை கருவேல முட்களை அகற்றி ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

முப்பது ஆண்டுகளாச்சு

எஸ். வி.முத்துச்சாமி, விட்டல்நாயக்கன்பட்டி: குடகனாறு கருவேலங்காடாக தெரிய காரணம், மக்கள் விறகுக்காக கூட இந்த மரங்களை மக்கள் வெட்டுவதில்லை. இதனால் குடகனாறு முட்காடாக காட்சி அளிக்கிறது. ஆற்றில் தொடர்ந்து நல்ல தண்ணீர் வந்து முப்பது வருடம் ஆகிவிட்டது. அதனால் ஆறு சுத்தமாகாமல் உள்ளது. தற்போது அடர்ந்து விட்ட கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆற்றை ஒரு முறையாவது சுத்தம் செய்தால் தான் குடகனாறு ஆறாக இருக்கும். இதற்கு அரசை எதிர்பார்க்காமல், பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X