பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் செட்டிகுளம் கண்மாய்

Added : அக் 14, 2021
Share
Advertisement
பெரியகுளம் : கல்லாறிலிருந்து வரும் நீர், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் ஆண்டு முழுவதும் தேங்கி மூன்று போக சாகுபடிக்கு கைகொடுத்த செட்டிகுளம் கண்மாய் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி ஓடையாக மாறி வருகிறது.தேனி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கும் கண்மாய்களில் பெரியகுளம் அருகேயுள்ள செட்டிகுளம் கண்மாயும் ஒன்றாகும். 30 ஏக்கர் பரப்பளவு

பெரியகுளம் : கல்லாறிலிருந்து வரும் நீர், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் ஆண்டு முழுவதும் தேங்கி மூன்று போக சாகுபடிக்கு கைகொடுத்த செட்டிகுளம் கண்மாய் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி ஓடையாக மாறி வருகிறது.

தேனி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கும் கண்மாய்களில் பெரியகுளம் அருகேயுள்ள செட்டிகுளம் கண்மாயும் ஒன்றாகும். 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வராகநதிக்கு அடுத்து மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள கல்லாற்றில் ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் செல்லும்.பருவமழை காலங்களில் கல்லாற்றில் தண்ணீர் செல்லும் அழகு, வராகநதியை பின்னுக்கு தள்ளும். கல்லாற்றின் வரும் தண்ணீர் செட்டிகுளத்திற்கு வரும்.

ஆண்டு முழுவதும் கண்மாயில் நீர் இருக்கும்.கண்மாய் நீர் ஆதாரத்தினால் மூன்று போகம் நெல் விளையும். பெரியகுளம் கீழவடகரை அழகர்சாமிபுரத்தில்துவங்கி, கல்லாறு நீர் பிடிப்பு வரை ஒரு கி.மீ., துாரம் உள்ளது. கண்மாய் நீரால் நேரடியாக300 ஏக்கரும், மறைமுகமாக கிணற்று பாசனத்தில் 150 ஏக்கர் விவசாயமும் நடந்தது. நெல், கரும்பு, வாழை, மா, தென்னை உட்பட அனைத்து பயிர்களின் சாகுபடி செய்தனர். பலர் கண்மாயில் பாதியளவிற்கும் மேலாக ஆக்கிரமித்து தென்னை, இலவம், வாழை வளர்க்கின்றனர். கண்மாயை ஆக்கிரமிப்பு நிலத்தை குத்தகை, ஒத்தி என ரூபாய் பல லட்சத்திற்கு விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் லாபம்பெறுகின்றனர்.

விவசாயிகள் கருத்து:

குடிநீர் ஆதாரம் பாதிப்பு

ஏ.சுகுமார், விவசாயி, பெரியகுளம்: எப்போதும் நீர் நிறைந்திருக்கும் செட்டிகுளம் கண்மாய். தற்போது ஆக்கிரமிப்பு அதிகரித்துகண்மாய் பரப்பளவு குறைந்து வருகிறது. இந்த கண்மாயின் நீர் நிறைந்திருக்கும் போது, கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் ஆழ்துளை குழாய் அமைத்தால் 20 முதல் 30 அடியில் தண்ணீர் கிடைக்கும். தற்போது ஆக்கிரமிப்பினால் நீர் இருப்பு குறைந்தும், கீழவடகரை ஊராட்சிக்கு வரும் நீரின் அளவும், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில்தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கும். ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும்.

கண்மாய் மீட்க வேண்டும்

கே.முத்தையா, விவசாயி, பெரியகுளம்: 30 ஆண்டுகளக்கு முன்பு இந்த கண்மாயில் நிறைந்து இருக்கும். தற்போது ஆக்கிரமிப்பினால் கண்மாய் பரப்பளவு குறைந்து, கரை சேதமாகியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டால் சில ஆண்டுகளில் கண்மாய் இருந்ததற்கான சுவடு இல்லாமல் போய்விடும். நீர் பிடிப்பு பகுதியில் தென்னை, இலவம், கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை இக் கண்மாயை அளவீடு செய்து, ஆக்கிரப்புகளை பாரபட்டசம் இல்லாமல் அகற்றி கண்மாயை காப்பாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X