சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மோதியதால் சாய்ந்த மின்கம்பங்கள்

Added : அக் 14, 2021
Share
Advertisement
வேடசந்துார் : விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மின்சார ஒயரில் மோதியதில் 5 கம்பங்கள் சாய்ந்தன.மாரம்பாடி ஊராட்சி பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் 30. இவர் தனது டிராக்டரில், அழகாபுரியில் இருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் வழியாக மாரம்பாடி நோக்கிச் சென்றார்.வேடசந்தூர் குப்பை கிடங்கை தாண்டிய போது, ரோட்டின் குறுக்கே சென்ற மின்இணைப்பு ஒயரில்,

வேடசந்துார் : விறகு ஏற்றிச் சென்ற டிராக்டர் மின்சார ஒயரில் மோதியதில் 5 கம்பங்கள் சாய்ந்தன.மாரம்பாடி ஊராட்சி பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் 30. இவர் தனது டிராக்டரில், அழகாபுரியில் இருந்து மரங்களை ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் வழியாக மாரம்பாடி நோக்கிச் சென்றார்.

வேடசந்தூர் குப்பை கிடங்கை தாண்டிய போது, ரோட்டின் குறுக்கே சென்ற மின்இணைப்பு ஒயரில், மரக்கட்டைகளால் உயரமான பாரம் ஏற்றிய டிராக்டர் மோதியது. இதில் மின்ஒயர் அறுந்து விழுந்தது.மின்சார ஒயர் இழுத்ததில் 5 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. டிராக்டரில் ஏறிய மரங்களும் சரிந்ததால் வாகனம் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது கீழே கிடந்த கம்பிகளில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்தது.மின்வாரியத்தில் தகவல் கொடுத்ததால், ஊழியர்கள் அப்பகுதி மின் இணைப்பை துண்டித்தனர். இதில் யாருக்கும் சேதமில்லை. அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X