பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் சாகுபடியில் ஊடுபயிராக உளுந்து; செயல்விளக்கம் வாயிலாக விழிப்புணர்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
உடுமலை : வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், மக்காச்சோளத்தில், உளுந்து ஊடுபயிர் செயல்விளக்க திடல் விளக்க பயிற்சி பெதப்பம்பட்டியில், நடந்தது.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளத்தில், உளுந்து ஊடுபயிர் செயல்விளக்க திடல் அமைக்கப்பட உள்ளது.இதற்காக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு


உடுமலை : வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், மக்காச்சோளத்தில், உளுந்து ஊடுபயிர் செயல்விளக்க திடல் விளக்க பயிற்சி பெதப்பம்பட்டியில், நடந்தது.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குடிமங்கலம் வட்டாரத்தில், 25 ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளத்தில், உளுந்து ஊடுபயிர் செயல்விளக்க திடல் அமைக்கப்பட உள்ளது.இதற்காக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி பெதப்பம்பட்டியில் நடந்தது.குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, தொகுப்பு செயல்விளக்க திடல் அமைப்பதன், நோக்கம், இத்திட்டத்துக்காக, வழங்கப்படும்

இடுபொருட்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.துணை வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் மக்காச்சோளத்தில் பயிர் பாதுகாப்பு, படைப்புழு தாக்குதல் கட்டுப்பாடு, இடுபொருட்கள் மானிய விபரம் குறித்து பேசினார்.திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் லாவண்யா, 'மக்காச்சோளத்தில், ஊடுபயிராக உளுந்து செய்வதன் நன்மைகள், விதை மற்றும் வேர் வாயிலாக பரவும் நோய்கள், பேவேரியா பேசியானா கொண்டு விதை நேர்த்தி செய்தல், உரச்செலவை குறைத்து, இயற்கை முறையில், உரங்கள் பெற திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல் பற்றி பேசினார்.

மேலும், அவர், மகசூலினை அதிகரிக்க தானிய நுண்ணுாட்டம் இடுதல், வறட்சி காலங்களில், நீர் பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்க, பூசாைஹடுரோஜெல் பயன்படுத்துதல், படைப்புழுவிலிருந்து பயிரை காக்க, மெட்டாரைசியம் தெளிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.விவசாயிகளுக்கு, மக்காச்சோளம் விதையில், உயிர் உரங்கள், விதை நேர்த்தி, பேவேரியா பேசியானா கொண்டு விதை நேர்த்தி, குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.உதவி வேளாண் அலுவலர்கள் கார்த்திக், செந்தில்குமார், ஜெயலட்சுமி மற்றும் குடிமங்கலம் வட்டார விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X