பொது செய்தி

தமிழ்நாடு

மணலாறு - மகாராஜா மெட்டு 10 கி.மீ.,ரோடு  பணி முடக்கம்

Added : அக் 14, 2021
Share
Advertisement
கம்பம் : ஹைவேவிஸ் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கி 4 ஆண்டுகள் ஆகியும் ரூ. 20 கோடி மதிப்பில் 10 கி.மீ., துார ரோடு புதுப்பிக்கும் பணி 8 மாதங்களாக முடங்கியுள்ளது.சின்னமனுாரிலிருந்து 45 கி.மீ., துாரமுள்ள ஹைவேவிஸ் மலைரோடு பயன்படுத்த லாயக்கற்றதாக மாறியது. தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த ரோடு, அரசு கையப்படுத்தியது. 2017 ல் பணிகள் துவங்கி ரூ. 95 கோடி மதிப்பீட்டில் சின்னமனுார் முதல்

கம்பம் : ஹைவேவிஸ் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கி 4 ஆண்டுகள் ஆகியும் ரூ. 20 கோடி மதிப்பில் 10 கி.மீ., துார ரோடு புதுப்பிக்கும் பணி 8 மாதங்களாக முடங்கியுள்ளது.

சின்னமனுாரிலிருந்து 45 கி.மீ., துாரமுள்ள ஹைவேவிஸ் மலைரோடு பயன்படுத்த லாயக்கற்றதாக மாறியது. தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த ரோடு, அரசு கையப்படுத்தியது. 2017 ல் பணிகள் துவங்கி ரூ. 95 கோடி மதிப்பீட்டில் சின்னமனுார் முதல் மணலாறு வரை 35 கி.மீ., துார ரோடு புதுப்பிக்கப்பட்டது. அதற்கு பின் மணலாறு முதல் மகாராஜாமெட்டு வரை உள்ள 10 கி.மீ., ரோடு கிடப்பில் உள்ளது.

இதற்கு 2020ல் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கியது. கடந்த மார்ச்சில் புலிகள் காப்பகமாக மாறியதால் பணிகள் நிறுத்தப்பட்டது. தேசிய புலிகள் முகமையிடம் அனுமதி பெற்று பணிமேற்கொள்ள வனத்துறை கூறியது. பணிகள் நிறுத்தி 8 மாதங்களாகிறது அனுமதி கிடைக்கவில்லை. 2017 ல் துவங்கிய பணிகள், 2021 முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இன்னமும் மணலாறு முதல் இரவங்கலாறு வரை ரோடு பணிக்க அனுமதி கிடைக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X