இலங்கை அதிபருடன் நரவானே பேச்சு | Dinamalar

இலங்கை அதிபருடன் நரவானே பேச்சு

Added : அக் 14, 2021 | கருத்துகள் (1)
Share
கொழும்பு:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை அதிபரிடம் நரவானே ஆலோசித்தார்.இதன்பின் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை நரவானே சந்தித்தார். இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பயிற்சிக்காக நரவானேவிடம் மகிந்தா ராஜபக்சே
 இலங்கை அதிபருடன் நரவானே பேச்சு

கொழும்பு:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை அதிபரிடம் நரவானே ஆலோசித்தார்.இதன்பின் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை நரவானே சந்தித்தார். இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பயிற்சிக்காக நரவானேவிடம் மகிந்தா ராஜபக்சே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இலங்கை வெளியுறவு செயலர் ஜெயந்த் கொலம்பாகேவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் பற்றி ஆலோசித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X