பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

Added : அக் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் இரு மடங்கு விலை அதிகரித்து விற்பனையானது.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு பல்வேறு வகை பூக்கள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.புரட்டாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறைவு,

திண்டுக்கல் : ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் இரு மடங்கு விலை அதிகரித்து விற்பனையானது.

மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு பல்வேறு வகை பூக்கள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.புரட்டாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறைவு, வார இறுதி நாட்களில் கோயில்களில் தரிசன தடை என்பதால் பூக்கள் விலை சரிந்து இருந்தது. இன்று (அக்.14) ஆயுதபூஜை, நாளை (அக்.15) விஜயதசமியை முன்னிட்டு நேற்று பூக்கள் இருமடங்கு விலை அதிகரித்து விற்றது.

15 டன் பூக்கள்

நேற்று முன்தினம் ரூ.400 க்கு விற்ற மல்லிகை நேற்று (அக்.13) ரூ.800, ரூ.350 க்கு விற்ற கனகாம்பரம் ரூ.800, ரூ.60 க்கு விற்ற செவ்வந்தி ரூ.120, ரூ.250 க்கு விற்ற முல்லை ரூ.550, ரூ.80 க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.200, ரூ.120 க்கு விற்ற சம்பங்கி ரூ.250, ரூ.20 க்கு விற்ற கோழி கொண்டை ரூ.40, ரூ.250 க்கு விற்ற அரளி ரூ.500 க்கும் விற்றது.

வழக்கத்தை விட நேற்று கூடுதலாக 5 டன் வீதம் மொத்தம் 15 டன் பூக்கள் விற்றது. விலை அதிகம் இருப்பினும் பொதுமக்கள், வியாபாரிகள் காலை முதலே பூக்கள் வாங்க குவிந்தனர். இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை ரோடு, வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X